தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/நோய் எதிர்ப்புச் சக்தி - தடுப்பூசி போட்டாலும் கஷாயமும் குடிக்கிறேன்!

நோய் எதிர்ப்புச் சக்தி - தடுப்பூசி போட்டாலும் கஷாயமும் குடிக்கிறேன்!

நோய் எதிர்ப்புச் சக்தி - தடுப்பூசி போட்டாலும் கஷாயமும் குடிக்கிறேன்!


PUBLISHED ON : ஜன 31, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 31, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆதார் உட்பட, முறையான அடையாள அட்டையுடன் நானும், என் மகன், டாக்டர் தீபுவும் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள, பதிவு செய்திருந்தோம். எந்த பயமும், தயக்கமும் இல்லாமல் தான் இருந்தது.

'ஊசி போட்ட பின், மது அருந்துவது, நீச்சல் பயிற்சி செய்வது தவிர, வேறு எந்த கட்டுப்பாடும் இல்லாமல், வழக்கமான வேலைகளை செய்யலாம்' என்று கூறினர். என்னை கேட்டால், வாய்ப்பு உள்ள அனைவரும், தடுப்பூசி போட்டுக் கொள்வதே நல்லது.

இது ஒரு பக்கம் இருந்தாலும், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நானே ஒரு கஷாயத்தை தயாரித்து, கடந்த பல மாதங்களாக தினமும் குடிக்கிறேன்; என்னுடன் பணி செய்பவர்களுக்கும் கொடுப்பேன்.

வெற்றிலை, இரண்டு; தவசி முருங்கை இலை, கற்பூரவல்லி, வேப்பிலை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு இலை, இரண்டு; துளசி இலை, ஒரு கொத்து; பிரியாணி இலை, கறிவேப்பிலை, ஒரு கொத்து; மல்லி தழை சிறிது; புதினா சிறிது; சின்ன வெங்காயம், 2; பூண்டு, 2 பல்; இஞ்சி, ஒரு துண்டு; எலுமிச்சைப் பழம், 1; மிளகு கால் ஸ்பூன்; சீரகம் அரை டீ ஸ்பூன்; கிராம்பு, 4; ஓமம் ஒரு டீ ஸ்பூன்; பீட்ரூட் கால் அளவு; நெல்லிக்காய், 4. இஞ்சி, பீட்ரூட்டை தோல் சீவி நறுக்கி, நெல்லிக்காயை விதை நீக்கி, எலுமிச்சம் பழத்தை நான்கு துண்டுகளாக வெட்டி, மேற்கூறிய அனைத்து பொருட்களையும், 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும் .

பாதியாக வற்றியதும், பிளாஸ்க்கில் ஊற்றி வைத்து, நாள் முழுதும் சிறிது சிறிதாக குடிப்பேன். வேப்பிலை இருப்பதால். லேசாக கசக்கும்; அதை பொருட்படுத்தக் கூடாது. இந்த நீரில் வைரசை அழிக்கும் எதிர்ப்பு சக்தி, இயற்கையாகவே உள்ளது.

இது தவிர, காலை, மாலை இரு வேளையும், கொதிக்கும் நீரில் நீலகிரி தைலம் அல்லது சிறிது விக்ஸ் போட்டு, ஆவி பிடிப்பேன்; உஷ்ணத்தில் கிருமிகள் அழிந்துவிடும்.

இந்த மாதிரி ஒரு கஷாயத்தை நீங்களே தயார் செய்து வைத்து, அவ்வப்போது குடியுங்கள். ஆவி பிடித்து, பயப்படாமல், அதே நேரம் கவனமாக இருங்கள்.

டாக்டர் கமலா செல்வராஜ்,

மகப்பேறு சிறப்பு மருத்துவர்,

ஜி.ஜி., மருத்துவமனை,

சென்னை.

044 - 2827 2675, 99622 29940

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us