நோய் எதிர்ப்பு சக்தி! - துளசி தரும் பாதுகாப்பு கவசம்!
நோய் எதிர்ப்பு சக்தி! - துளசி தரும் பாதுகாப்பு கவசம்!
PUBLISHED ON : ஜன 18, 2021

பல ஆண்டுகளுக்கு முன் கோல்கட்டாவில் நிகழ்ந்த ஆராய்ச்சி இது.
புகையிலையை எரித்தால் அதிலிருந்து கசியும் திரவம், கார்பன் டெட்ரா குளோரைடு. நரேந்திர சிங் எனும் விஞ்ஞானி, இந்த திரவத்தில் ஒரு துளி எடுத்து, முயலின் உடலினுள் ஊசி மூலம் செலுத்தினார்; சில நிமிடங்களில் முயல் துடிதுடித்து இறந்தது.
இதிலிருந்து நரேந்திர சிங் அறிந்த உண்மை, புகையிலையை எரித்தால் வெளிவரும் கார்பன் டெட்ரா குளோரைடு, கொடிய நஞ்சு என்பதாகும். இதை எப்படி முறிப்பது? நரேந்திர சிங் ஆராய்ச்சியை தொடர்ந்தார்.
துளசி இலைகளைப் பறித்து, அதை சாறு பிழிந்து எடுத்துக் கொண்டார். 10 முயல்கள் அடங்கிய இரு குழுவாக பிரித்து, முதல் குழுவில் உள்ள, 10 முயல்களுக்கு தினமும் காலை, இரவு என இருவேளையும், துளசி சாறு சிறிது புகட்டி வந்தார். அதே நேரம் இரண்டாவது குழு முயல்களுக்கு, துளசி சாறு கொடுக்காமல் சாதாரணமாக வளர்த்து வந்தார்.
ஒரு மாதம் கழிந்தது. இரண்டு குழு முயல்களுக்கும், சில துளிகள் கார்பன் டெட்ரா குளோரைடை ஊசி மூலம் செலுத்தினார்.
தினம் இரண்டு வேளை துளசி சாறு அருந்திய முயல்கள், எவ்வித பாதிப்பும் இன்றி, சுறுசுறுப்பாக விளையாடின; ஆனால், துளசி சாறு புகட்டப்படாத முயல்கள், ஒன்றன் பின் ஒன்றாக துடிதுடித்து இறந்தன.
இந்த சம்பவத்திலிருந்து டாக்டர். நரேந்திர சிங் அறிந்த உண்மை இதுதான்;
புகையிலை நஞ்சான கார்பன் டெட்ரா குளோரைடு உயிரைக் கொல்லும் திறன் உடையது; அதை முறித்து, உயிரைக் காப்பாற்றக்கூடியது துளசி சாறு.
இந்த ஆராய்ச்சியை விரிவுபடுத்திய டாக்டர். நரேந்திர சிங், 'புகையிலைப் பொருட்களால் தயாரிக்கப்படும் பீடி, சிகரெட், பான் மசாலா போன்றவற்றைப் பயன்படுத்துவதால், அதில் உள்ள கார்பன் டெட்ரா குளோரைடு நம் நுரையீரல், இதயம், கல்லீரல், ஆகியவற்றை மெல்ல மெல்ல சேதப்படுத்தி, இறுதியில் கேன்சர், இதய பாதிப்பு போன்ற கொடிய நோய்களுக்கு உயிரை பலியாக்கி விடுகிறது.
இதை தடுக்க தினசரி துளசி இலை, 20 எடுத்து மென்று சாப்பிட்டால், புகையிலை நஞ்சு முறிந்து நோயிலிருந்து மீளலாம்...' என்கிறார்.
நம் முன்னோர் இதை அனுபவபூர்வமாக உணர்ந்து, பெருமாள் கோவில்களில் துளசியை பிரசாதமாகக் கொடுத்தனர். இதை, பிரசாதமாக நாம் அருந்தியதால் தான், இன்றும் ஆரோக்கியமாக வாழ்கிறோம்.
ஆன்மிக அனுபவமும், அறிவியல் ஆதாரமும் உரத்த குரலில் சொல்லும் சேதி, துளசி மிகச்சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தி மூலிகையாகும். கொரோனா வைரஸ் மற்ற நாடுகளை விட, நம் நாட்டு மக்களை அதிக அளவில் பாதிக்காமல் விட்டதன் காரணத்தை ஆராய்ந்தால், தினமும் துளசி சாப்பிடுவதாக இருக்கலாம்.
துளசியின் மருத்துவ மகிமையை நவீன அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டு வியக்கின்றனர் என்பது நுாறு சதவீதம் உண்மை!
துளசி இலைகளை பறித்து, தாமிர பாத்திரத்தில் போட்டு அத்துடன் ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து ஊற வைத்து, காலை முதல் மாலை வரை கோவில்களில் தரும் துளசி தீர்த்தம் ஆரோக்கிய கவசமாகும்.
இதை தான், துளசி நோய் எதிர்ப்புச் சக்தியின் ஊற்று என்று குறிப்பிடுகிறார், டாக்டர் நரேந்திர சிங்.
'கோவிட் - 19' வைரஸ் மட்டுமல்ல இனி வர இருக்கும் எல்லா வைரஸ்களையும், உடலினுள் நுழையாமல் தடுக்கும் ஆற்றல், துளசியில் நிறைவாக உள்ளது.
கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு நம் பாரம்பரிய மூலிகைகள் எந்த அளவு பயன் தரும் என்று, நம் மருத்துவ விஞ்ஞானிகள் ஆராயவே இல்லை என்பது வேதனையான செய்தி. கடந்த ஓராண்டில் துளசி, சீந்தல், நெல்லி, துாதுவளை, கற்பூரவல்லி போன்ற மூலிகைகளை, கொரோனா ஒழிப்பு ஆராய்ச்சிக்கு எடுத்து இருந்தால், தடுப்பூசிக்கு அவசியம் இருந்திருக்காது.
கொரோனா பயத்திலிருந்து விடுபட தினமும் காலை, இரவு என இருவேளை, துளசி இலை, 20, மிளகு, 10, தோல் நீக்கிய இஞ்சி, 1 துண்டு, கிராம்பு 5 இவற்றை, இடித்து, 150 மி.லி., தண்ணீரில் போட்டு, 10 நிமிடம் கொதிக்க வைத்து, மஞ்சள் பொடி, 3 சிட்டிகை கலந்து, ஆறிய பின், 2 ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்.
கொரோனா வைரஸ் உடலினுள் நுழையவே நுழையாது. தொடர்ந்து சாப்பிடலாம்; பக்க விளைவு ஏதும் நேரிடாது.
வைரஸ் தொற்று மட்டுமின்றி, பிற வகை தொற்றுகளையும் தடுக்கக்கூடியது துளசி.
மூலிகை மணி டாக்டர் க.வேங்கடேசு,
சித்த மருத்துவர், சென்னை.
போன்: 73388 23784
