தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/முதியோருக்கு இம்சை தரும் இன்புளூயன்சா கவனமாக இருந்தால் சமாளிக்கலாம் ஈசியா

முதியோருக்கு இம்சை தரும் இன்புளூயன்சா கவனமாக இருந்தால் சமாளிக்கலாம் ஈசியா

முதியோருக்கு இம்சை தரும் இன்புளூயன்சா கவனமாக இருந்தால் சமாளிக்கலாம் ஈசியா


PUBLISHED ON : ஜன 25, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 25, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பருவநிலை மாற்றம், குளிர்காலம் துவங்கியது முதல், முதியோர் மத்தியில் இன்புளூயன்சா எனும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் நோயால் கடுமையாக பாதிக்கப்படுவதை காண்கிறோம்.

அறிகுறிகளை சாதாரண காய்ச்சல் என அலட்சியப்படுத்தாமல், டாக்டர்களிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்கிறார், அரசு மருத்துவமனை முதியோர் நலப்பிரிவு சிறப்பு நிபுணர் டாக்டர் பாரதி

அவர் நம்மிடம் கூறியதாவது

தற்போதைய பருவநிலை காரணமாக இன்புளூயன்சா பாதிப்பு முதியோர் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. இது ஒரு வைரஸ் தொற்று. சுவாச குழாய்கள், மூக்கு, தொண்டை, நுரையீரலை பாதிக்கிறது.

சாதாரண சளி, காய்ச்சல் போன்றுதான் இதுவும். எளிதாக தொற்றிக்கொள்ளும். இப்பாதிப்பு உள்ளவர்களிடம் நேரடி தொடர்பு, சுத்தமில்லாத கைகள் வழியாக பரவுதல், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, நீரிழிவு, இதய நோய், நுரையீரல் நோய் போன்ற இணை நோய்கள் இப்பாதிப்பு ஏற்படவும், தீவிரமாகவும் காரணமாகவுள்ளன.

திடீர் காய்ச்சல், கடும் சோர்வு, உடல் வலி, தலைவலி, இருமல், சளி, தொண்டை வலி, மூச்சுத்திணறல், உணவில் விருப்பமின்மை, வாந்தி, வயிற்றுபோக்கு இதன் அறிகுறிகள். பாதிப்பு தீவிரம் அடைந்தால், நுரையீரல் தொற்று ஏற்படும்.

காய்ச்சல் ஏற்படும் போது ரத்த, சளி பரிசோதனை, ஆக்சிஜன் அளவு போன்றவற்றின் வாயிலாக உறுதிசெய்து கொள்ளலாம். இச்சமயத்தில் திட உணவு உட்கொள்ள சிரமாக இருக்கும் என்பதால், தண்ணீர், கஞ்சி அதிகம் எடுத்துக்கொள்ளலாம். சுயமாக மருந்துகளை எடுக்காமல், மருத்துவரை அணுகி உறுதி செய்து கொள்வது அவசியம்.

முதுமை வயதில் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை, இன்புளூயன்சா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவது பாதிப்புகளை குறைக்கும்.

கைகளை அடிக்கடி சோப்பால் கழுவுதல், கூட்டமான இடங்களை தவிர்த்தல், நல்ல சத்தான உணவு எடுத்துக்கொள்வதும் அவசியம். குடும்பத்தில் காய்ச்சல் பாதிப்பு இருந்தால், நெருங்கிய தொடர்பை தவிர்ப்பது நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us