sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/கடைபிடித்தால் நலம்!

கடைபிடித்தால் நலம்!

கடைபிடித்தால் நலம்!


PUBLISHED ON : ஏப் 30, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 30, 2017


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நம் வாழ்க்கை முறையில், சின்ன, சின்ன பழக்கங்களை முறையாக கையாண்டாலே, உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதற்கென சில வழிமுறைகளை, தொடர்ந்து பின்பற்ற வேண்டும். மனித உடலுக்குத் தேவையான நீரை, தாகம் எடுப்பதன் மூலம் உடல் கேட்கிறது. தாகம் எடுக்கும்போது நீர் அருந்தாமல் இருப்பது தவறு. நிறைய நீர் குடிப்பது, பொதுவாக உடல் நலத்துக்கு நல்லது தான். ஆனால், அந்தத் நீர் சுத்தமான நீராக இருக்க வேண்டும்.

குடிநீரை நன்றாக வடிகட்டி காய்ச்சிய பின்பே குடிக்க வேண்டும். அசுத்தமான நீரை குடிப்பதன் மூலம், டைபாய்டு, காலரா, வயிற்றுப்போக்கு உட்பட பல நோய்கள் தாக்கும். நீரை காய்ச்சி குடிப்பதால் சாதாரண வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் காலரா, மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்களின் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

கைகளில் சுத்தம்

வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும் வேளையில், கை கால்களை, சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதன் மூலம், சில நோய்களை தவிர்க்க முடியும். உணவு சாப்பிடும் முன்னும், கழிப்பிடம் சென்று வந்த பின்பும், கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். குளிர் சாதனப் பெட்டியில் இருந்து எடுத்து வைத்த உடன், உணவை உட்கொள்ளக் கூடாது. அவற்றை வெளியில் எடுத்து, அறையின் தட்பவெட்பத்துக்கு வந்த பின், உணவை சூடு பண்ணிச் உட்கொள்வதன் மூலம், நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

உடலின் தண்ணீர் தேவை, ஒன்றரை லிட்டரிலிருந்து, இரண்டு லிட்டர் வரை. வேலை மற்றும் அவர்களின் உடலின் வியர்வைக்கேற்ப, நபருக்கு நபர் மாறுபடும். உடல் உழைப்பு அதிகமானவர்கள், நிறைய நீர் குடிக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையும் பட்சத்தில் களைப்பு, உடல்வலி, நீர்க்கடுப்பு, மலச்சிக்கல், நாள்பட சிறுநீர்ப் பாதை கல், மூலம், வயதானோர்க்கு மயக்கம் என பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.

எலுமிச்சையும் உப்பும்

நா வறட்சி, அடிக்கடி தாகம் எடுப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படும். வியர்வை நீருடன் உப்பும் சேர்ந்து வெளியேறிவிடுவதால் உடலுக்கு உப்புச் சத்தை மீண்டும் தராமல் இருப்பதாலும், உடற்கேடுகள் விளையும். கோடை காலத்தில் உடல், அதிகமான வியர்வையால் வறட்சியாகாமல் இருக்க, எலுமிச்சை சாறில், உப்பு கலந்து அவ்வப்போது அருந்தலாம்.

வியர்க்கும் போது ஏற்படும் அரிப்பால், தோல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வியர்வை சருமத்தை நன்றாகக் கழுவி, ஈரத் துணியில் துடைத்தால் வியர்க்குரு வராது. வியர்வையை சுத்தமாக கழுவவில்லை எனில், உடல் இடுக்குகளில் பாதிப்புகள் வரலாம். இதைத் தவிர்க்க, கோடை காலத்தில் தினமும், காலை, மாலையில் குளிப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.

ஆடைகளில் கவனம்

சுத்தமாக துவைக்கப்பட்ட ஆடைகளையே அணிய வேண்டும். வெய்யில் காலத்தில் காட்டன் உடைகள் அணிவது நல்லது. இவை, அதிகப்படியான வியர்வையை உறிஞ்சி விடும். அதிக வியர்வைப் பிரச்னை உடையவர்கள் வசதி மற்றும் வாய்ப்பு இருந்தால், ஒரு நாளில் இரண்டு தடவை உடை மாற்றிக் கொள்ளலாம். உணவுப் பண்டங்களை சுத்தமான நீரில் கழுவிச் சாப்பிட வேண்டும். இளநீர், மோர், பழச்சாறு, சாதம் வடித்த தண்ணீர், கஞ்சி, கூழ், நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை கோடைக் காலத்தில் அதிகம் உட்கொள்வது நல்லது. சமைத்த உணவை நன்றாக சூடுபடுத்தி சாப்பிடுவது நலம் பயக்கும். மிகவும் குளிர்ந்த நீரையோ உணவையோ உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us