sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மே 02, 2026 ,சித்திரை 19, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

சமையல் அறையில் இருக்கு மூட்டு வலிக்கு மருந்து!

/

சமையல் அறையில் இருக்கு மூட்டு வலிக்கு மருந்து!

சமையல் அறையில் இருக்கு மூட்டு வலிக்கு மருந்து!

சமையல் அறையில் இருக்கு மூட்டு வலிக்கு மருந்து!


PUBLISHED ON : ஜூன் 04, 2017

Google News

PUBLISHED ON : ஜூன் 04, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூட்டு வலி முதியவர்களை கடுமையாக பாதிக்கும். மூட்டுகளில் வீக்கத்துடன் கடுமையான வலியும் வரும். இத்தகைய மூட்டு வலி வருவதற்கு காரணம், உடலில் யூரிக் ஆசிட்டின் அளவு அதிகமாக இருப்பதே. வலியை குணமாக்க, அன்றாட உணவு முறைகளே போதுமானது. உணவில் உள்ள கரோட்டீன் மூலம், வலியை நிவாரணம் செய்ய முடியும். இந்த கரோட்டீன், வெங்காயத்தில் அதிகமாக உள்ளது.

யூரிக் ஆசிட் அதிகம் உள்ள உணவான தக்காளியை சாப்பிட்டால், இன்னும் மூட்டு வலியானது அதிகமாகுமே தவிர, குணமாகாது.

மஞ்சள்: மஞ்சள் ஒரு கிருமி நாசினி. எனவே இதில் உள்ள மருத்துவப் பொருளானது, உடலில் உள்ள காயங்களை குணப்படுத்தி, மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைத்துவிடும்.

இஞ்சி: இஞ்சியிலும் மஞ்சளைப் போன்ற, மருத்துவக் குணம் உள்ளது. தினமும் இஞ்சியை சேர்த்துக் கொள்வது சிறந்த நன்மையைத் தரும்.

ஆலிவ் ஆயில்: இந்த எண்ணெயில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஒமேகா 3 பேட்டிஆசிட் உள்ளதால், அவை மூட்டுகளில் எந்த பிரச்னை இருந்தாலும் சரி செய்யும்.

சமையல் எண்ணெய்: சோயா பீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய்களில் அதிக அளவில் ஒமேகா 6 பேட்டிஆசிட் இருக்கிறது. பேட்டி ஆசிட், மூட்டுகளில் காயங்கள் மற்றும் வலிகளை அதிகமாக்கும்.

வெங்காயம்: வெங்காயத்தில் க்யூயர்சிடின் (quercetin) என்னும் கெமிக்கல் உள்ளது. இந்த கெமிக்கல், ஆஸ்பிரின் (aspirin) போன்றே, ஒரு சிறந்த வலி நிவாரணி.

பூசணிக்காய்: பூசணிக்காயில் கரோட்டீன் அதிகம் நிறைந்துள்ளது. இதனை சாப்பிடுவதால், மூட்டுகளில் ஏற்படும் காயங்கள், வீக்கங்கள் மற்றும் வலிகள் நாளடைவில் குணமாகும்.

மீன்: மீனில் ஒமேகா 3 பேட்டிஆசிட் அதிகம் உள்ளதால், அவை உடலின் மூட்டுகளில் உள்ள காயங்களை குணப்படுத்தும். அவை உடலில் உள்ள குருத்தெலும்பு திசுக்களை (Cartilage tissue) சாப்பிடும் உற்பத்தியை, தடுத்துவிடும்.

கிரீன் டீ: கிரீன் டீயில் நிறைய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே அவை உடலின் மூட்டுகளில் ஏற்படும், வலியின் அளவை குறைத்துவிடும். இதில் உள்ள நிக்கோட்டின் ஒரு சிறந்த வலி நிவாரணி.

பால்: பாலில் அதிகமான அளவில் ப்யூரின் இருப்பதால், அவை யூரிக் ஆசிட்டின் அளவை அதிகரிக்கும். எனவே இதனை தவிர்க்க வேண்டும்.

கடல் சிப்பி: சிப்பிகளில் ப்யூரின் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், யூரிக் ஆசிட்டின் அளவு அதிகமாகி, மூட்டுகளில் வலியும் அதிகமாகும்.

ஆரஞ்சு: ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் 'சி' அதிகம் உள்ளதால், எலும்புகளுக்கு ஆரோக்கியத்தை தரும்.

தானியங்கள்: கோதுமை, பார்லி மற்றும் ஓட்ஸ் போன்றவற்றில் சிம்பிள் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. எனவே அவற்றை சாப்பிடும் போது, அவை ஆர்த்ரிடிஸ் நோய்க்கான அறிகுறியை அதிகரிக்கும்.

செர்ரி: செர்ரியில் உள்ள ஆந்தோசயனின்கள், குருத்தெலும்புகள், ஜவ்வுகளை வலுப்படுத்த உதவும். மூட்டு வலி இருப்பவர்கள், இதனை சாப்பிட்டால், வலியை குறைத்து, மூட்டுகளை வலுவாக்கலாம்.

கத்திரிக்காய், சிவப்பு குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை, குணமாகிக் கொண்டிருக்கும் மூட்டு வலியையும் குணமாகாமல் தடுக்கும். எனவே இந்த காய்கறிகளை தவிர்க்கவும்.






      Dinamalar
      Follow us