தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/தெரிஞ்சுக்குங்க

தெரிஞ்சுக்குங்க

தெரிஞ்சுக்குங்க


PUBLISHED ON : ஜூலை 17, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 17, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொற்று ஏற்பட்டால், எவ்வளவு நாள் நீடிக்கும்?

தொற்றுக்குக் காரணமான வைரசின் வீரியத்தைப் பொறுத்து, தொற்று நீடிக்கும். நிறைய பேருக்கு, தொற்று பரவுவதற்கு முன்பாகவே, உடல்நலமில்லாத உணர்வு அல்லது பாதிப்பு தென்படும். சளித்தொற்று ஏற்படுவதற்கு, 1 முதல் 2 நாட்களுக்கு முன்பாகவே இந்த அறிகுறிகள் தென்படும். அடுத்த 2 அல்லது 3 நாட்களில், இந்த அறிகுறிகள் அதிகரித்த நிலையிலும், அதன் பிந்தைய நாட்களில், தொற்றின் கடுமை குறைந்தும் காணப்படும். இந்த தொற்று, அடுத்தவர்களுக்குப் பரவாமல் தடுக்க, கைக்குட்டை அல்லது மெல்லிய தாள்களை பயன்படுத்தலாம். தும்மல் அல்லது இருமல் சமயங்களில், அடிக்கடி உங்கள் கைகளை கழுவிக் கொள்வது நல்லது.

'டெஸ்டிக்யுலர் கேன்சர்' என்றால் என்ன?

ஆண்களின் விந்தணுப் பையில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த புற்றுநோய் ஏற்படுவது மிக அரிதே. வலியில்லாத வீக்கம் மற்றும் கட்டி போன்று காணப்படுவதே, இதன் அறிகுறி. சிலசமயங்களில், விந்தணுப் பையில் பளு, மந்தமான வலி போன்ற உணர்வும் இருக்கும். கட்டி அல்லது வீக்கம் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. பரிசோதனையில், அது புற்றுநோயா என்பதை கண்டறியலாம். புற்றுநோய் இருப்பது தெரிய வந்தால், அப்பகுதி நீக்கப்படும். இப்பகுதி நீக்கப்பட்டால், எந்த வகையிலும் ஆண்மை பாதிக்காது. எனவே, விந்தணுப் பையை எப்போதும் சுய பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us