PUBLISHED ON : நவ 26, 2017

அதிகப்படியான உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால், பாட்டி சாப்பாடு தான், 'பெஸ்ட்!' இந்திய பாரம்பரிய உணவுகளான, இட்லி, கோதுமை ரொட்டி, சப்ஜி மற்றும் அவல் போன்றவை, சிறந்த உணவுகள். உடல் எடையை குறைப்பதற்கென்றே, 'ஸ்பெஷல்' உணவை தேடாமல், அரிசி சாதம், வாழைப்பழம், மாம்பழம், பசு நெய், பருப்பு போன்றவற்றை, அளவு குறைவாக சாப்பிடலாம்; இதனால், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதுடன், எடையும் குறையும். சாப்பிடும் அளவில் கவனமாக இருப்பது தான் முக்கியம். எல்லா கொழுப்பும், நம் உடலுக்கு கெடுதல் செய்பவை அல்ல. சில கொழுப்புச் சத்துக்கள், உடலுக்கு அவசியம்.
சுத்தமான பசு நெய்யில், நல்ல கொழுப்பு அமிலமான, 'ஒமேகா - 3 மற்றும் 9' இருப்பதுடன், வைட்டமின்கள், 'ஏ, டி, ஈ, கே' போன்றவையும் உள்ளன. எனவே, சாதம் அல்லது ரொட்டியில், ஒரு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்வது நல்லது.
ருஜுதா திவாகர், நியூட்ரிஷனிஸ்ட், மும்பை.

