தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/குண்டு மல்லி,கொஞ்சம் கேளு! - குழந்தையும் உணவும்!

குண்டு மல்லி,கொஞ்சம் கேளு! - குழந்தையும் உணவும்!

குண்டு மல்லி,கொஞ்சம் கேளு! - குழந்தையும் உணவும்!


PUBLISHED ON : நவ 11, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 11, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாய்ப் பால் கொடுக்கும், பச்சிளங் குழந்தைகளின் அம்மாக்களிடம் கேட்டால், ஒரு விஷயம் தெளிவாகப் புரியும். தினமும் குழந்தை பால் குடிக்கும் நேரமும், அளவும் சரியான நேரத்தில், சரியான அளவில் இருக்கும். கடிகாரம் போலவே, ஒரு வினாடியும் தவறாமல் இது நடக்கும்.

அது, நள்ளிரவு 2:00 மணியானாலும் சரி, அதிகாலை, 6:00 மணியானாலும் சரி, பால் குடிக்கும் நேரத்தை மாற்றவே மாட்டார்கள்.

குழந்தை சரியான அளவு பால் குடித்த பின், அம்மா தொடர்ந்து பால் புகட்டினாலும், குழந்தை பாலை சப்பும், விளையாடும், கடிக்கும்... ஆனால், துளி கூட தேவைக்கு அதிகமாக அதன் வயிற்றிற்குள் போகாது.

தன் குட்டி வயிற்றிற்கு எவ்வளவு உணவு தேவை, எந்த நேரம் தேவை என்பது, குழந்தையின் உள்ளுணர்வில் இருக்கும் இயற்கையான விஷயம். உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது வேறு ஏதாவது பிரச்னை இருந்தாலோ, இந்த வழக்கம் மாறலாம்.

ஆனால், ஆரோக்கியமான குழந்தைக்கு, தனக்கு பால் தேவைப்படும் நேரம், அம்மாவுக்கு வசதியான நேரமா என்பதெல்லாம் தெரியாது. சரியான நேரத்தில், அதற்கு வயிற்றில் மணி அடிக்கும்; தேவைக்கு மேல், ஒரு சொட்டு கூட அதிகமாக இறங்காது.



ருஜிதா திவேகர்

நியூட்ரிஷனிஸ்ட், மும்பை.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us