தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/குண்டு மல்லி,கொஞ்சம் கேளு!: உடல் பருமனை குறைக்கும், 'ராஜ உணவு!'

குண்டு மல்லி,கொஞ்சம் கேளு!: உடல் பருமனை குறைக்கும், 'ராஜ உணவு!'

குண்டு மல்லி,கொஞ்சம் கேளு!: உடல் பருமனை குறைக்கும், 'ராஜ உணவு!'


PUBLISHED ON : டிச 30, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 30, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குழந்தைகளுக்கு எளிதாக செரிமானம் ஆகக் கூடியது, அரிசி சார்ந்த, கார்போ ஹைட்ரேட் உணவுகள். ஒரு நாளில், ஒரு வேளையாவது அரிசி சாப்பிட வேண்டும்.

காலை உணவைத் தவிர்த்து, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக் கூடாது. இரவு சாப்பாட்டிற்கு பின், அடுத்த வேளை உணவான, காலை உணவு சாப்பிடுவதற்கு, குறைந்தது, 10 மணி நேரம் ஆகிறது. காலை உணவு தான், உணவுக்கெல்லாம் ராஜா. இதைத் தவிர்த்து, நேரடியாக மதிய உணவு சாப்பிட்டால், குழந்தைகளின் உடல் பருமன் அதிகரிக்கும்.

ஒரு வேளையாவது, காய்கறி, பழம் சாப்பிடக் கொடுக்க வேண்டும். வீட்டில் செய்து தரும் தின்பண்டங்கள் ஆரோக்கியமானவை; தேவையில்லாத கொழுப்பு சேராது.

இரவு சாப்பிட்டவுடன், துாங்குவதற்கு குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது. குறைந்தது, அரைமணி நேரம் நடப்பது அல்லது வேறு ஏதாவது செய்யச் சொல்லலாம்.

இந்தப் பழக்கங்களை தவறாமல் கடைப் பிடித்தாலே, குண்டு குழந்தை, ஆரோக்கியமாகி விடும்.

டாக்டர் பி.எஸ்.அரவிந்த் ராஜா

குழந்தைகள் நல மருத்துவர், சென்னை.

90037 52040


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us