குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: இருபத்தி இரண்டில் ஒரு ஏழு!
குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: இருபத்தி இரண்டில் ஒரு ஏழு!
PUBLISHED ON : டிச 31, 2017

அதிக உடல் எடை குறைய, தினமும் உடற்பயிற்சி அவசியமா என, நிறைய பேருக்கு சந்தேகம் உள்ளது. என்னைக் கேட்டால், மாதத்தில், 22 நாட்கள் சத்தான, ஆரோக்கியமான உணவை திட்டமிட்டு சாப்பிடுபவர் என்றால், அந்த, 22 நாட்களில், ஏழு நாட்கள் உடற்பயிற்சி செய்தால் போதும்; நடைப்பயிற்சியோ, ஜாகிங்கோ கூட நல்ல பலனைத் தரும்.
அதேபோல, உடலின் எந்த பாகம் குண்டாக உள்ளதோ, அதற்கு மட்டும் உடற்பயிற்சி செய்வதும் தவறு. அந்த குறிப்பிட்ட பகுதியில் உள்ள தசைகளுக்கு வேலை கொடுக்கிறோம் என்பதைத் தவிர, வேறு எந்த பலனும் கிடையாது. தலை முதல் கால் வரை, ஒரே சீராக, எல்லா தசைகளுக்கும் வேலை தரும் விதமாக, உடற்பயிற்சி இருக்க வேண்டும். மாதத்தில், ஒன்றரை முதல் இரண்டு கிலோ வரை, சீராக எடையைக் குறைப்பது ஆரோக்கியமானது; அது தான் நீண்ட பலன் தரக் கூடியது. தண்ணீர் தேவை என்பது, நபருக்கு நபர் மாறுபடும். ஆனாலும், ஒரு நாளைக்கு, ஏழு முதல் எட்டு டம்ளர் வரை தண்ணீர் குடிப்பது, எடை குறைய உதவும்.
ருஜுதா திவாகர், நியூட்ரிஷனிஸ்ட், மும்பை.

