தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: குறைவாக சுரக்கும்... அதிகம் ஏறும்!

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: குறைவாக சுரக்கும்... அதிகம் ஏறும்!

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: குறைவாக சுரக்கும்... அதிகம் ஏறும்!


PUBLISHED ON : பிப் 04, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 04, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நரம்பு செல்களுக்கிடையில், தகவல் பரிமாற்றத்திற்கு உதவுவது, மூளையில் சுரக்கும், 'டோபமைன்' என்ற வேதிப்பொருள் தான். மகிழ்ச்சி, திருப்தி போன்ற நேர்மறை உணர்வுகளைத் தருவதும் இந்த வேதிப்பொருள் சுரப்பு தான்.

'உடல் பருமன் இருந்தால், 'டோபமைன்' சுரப்பு, தேவையை விட, குறைவாக இருக்கும்' என, சமீபத்திய சர்வதேச மருத்துவ ஆராய்ச்சி கூறுகிறது. போதுமான அளவு, 'டோபமைன்' சுரக்காவிட்டால், எவ்வளவு தான் சாப்பிட்டாலும், சாப்பிட்ட திருப்தியே கிடைப்பதில்லை; இதனால், தேவைக்கு அதிகமாக சாப்பிட்டு, உடல் எடை அதிகரிக்கிறது.

'டோபமைன்' இயற்கையிலேயே சுரக்க என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டால், நமக்கு விருப்பமான வேலைகளை முழு மனதோடு செய்வது, இசை கேட்பது, தியானம், புதியதாக ஒரு விஷயத்தை ஈடுபாட்டுடன் கற்றுக் கொள்வது என, ஆர்வத்துடன் ஒரு காரியத்தை செய்தாலே, 'டோபமைன்' சுரப்பு நன்றாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us