PUBLISHED ON : மார் 31, 2015

வாழ்க்கை மாற்றத்தால், உயர் ரத்த அழுத்தம் இன்று தவிர்க்க முடியாத ஒரு நோயாக மாறிவிட்டது.
உயர் ரத்த அழுத்தம், என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும்?
ரத்த தமனியை வலுவிழக்க செய்து வீங்கி, விரிவடைய செய்யும். இது ஆபத்தான நிலை. உயர் ரத்த அழுத்தத்தால், பார்வை நரம்பு பாதிக்கப்பட்டு, கண்ணில் ரத்த கசிவு ஏற்படும். பார்வை பாதிக்கப்படும். சிறுநீரகத்தின் செயற்பாடுகள் மோசமாகி விடும். அதனால், உடலில் இருந்து கால்சியம் நீக்கப்படும். தூக்கம் கெட்டு போகும். இது 'கரோனரி' என்ற தமனி நோயை ஏற்படுத்துகிறது.இந்த நோய், இதயத்திற்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டத்தை தடை செய்யும். இதனால் நெஞ்சு வலியும், மாரடைப்பும் ஏற்படலாம். அதிக ரத்த அழுத்தத்தால், இதயத்திற்கு அழுத்தம் ஏற்படும் போது, அது தன் திறனை இழக்கும். மெதுவாக இதயம் சோர்வடைந்து, உயிருக்கே ஆபத்து விளையும். மூளைக்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டமும் பாதிக்கப்படும். அதற்கு எச்சரிக்கை அறிகுறியாக, சிறிய வாதம் (டி.ஐ.ஏ.,) ஏற்படும்.சரியான ரத்த அழுத்தம் மூலம், மூளைக்கு தேவையான ஊட்டச்சத்துகளும் ஆக்சிஜனும் போய் சேர வேண்டும். ஒழுங்காக போய் சேரவில்லை என்றால், மூளையில் உள்ள அணுக்கள் செத்துவிடும். பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படும். உடலில் ரத்த அழுத்தம் அதிகமாகி விடாமல், வாழ்வியல் மற்றும் உணவு மாற்றங்கள் மூலம், நோய்களை அண்டவிடாமல் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
- எம்.சென்,
உடற்பருமன் அறுவை சிகிச்சை நிபுணர்
044 - 2558 6896
