தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ஆண்டவன் உணவு ஆப்பிள்

ஆண்டவன் உணவு ஆப்பிள்

ஆண்டவன் உணவு ஆப்பிள்


PUBLISHED ON : நவ 13, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 13, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகம் முழுவதிலும் ஆப்பிள் பழம் மதிப்பு வாய்ந்த பழமாக மதிக்கப்படுகிறது. ஸ்காண்டினேவிய நாட்டவர்கள் ஆப்பிளை, கடவுளின் உணவு என்கின்றனர். 'நாள்தோறும் ஒரு ஆப்பிள் உண்பது வைத்தியரை விரட்டும்' என்பது ஆங்கில மொழி.

உள் உறுப்புக்களும், சுரப்பிகளும் செயல்பட உதவும் நுண்ணூட்ட சத்துக்களும் பல்வேறு அமிலங்களை சரியாகச் சுரக்கவைத்து, சீர்படுத்த உதவும் அமிலங்களும் ஆப்பிளில் உள்ளன. ஆப்பிள், உடல் வளர்ச்சிக்கு ஆரோக்கியம் பெருகுவதற்குரிய பயன்களைத்தருகிறது. வைட்டமின் குறைவினால் ஏற்படுகின்ற நோய்களைக் குணப்படுத்தும். அத்துடன் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும்.

அன்றாடம் உடல் ஆரோக்கியம் மேம்படவும் நாம் உண்ணும் உணவிலுள்ள நச்சுகளை நீக்கவும், ரத்தத்தில் கலந்துள்ள நுண்கிருமிகளை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யவும் பழங்களை உண்ணுதல் நல்லது. இவற்றில் முதலிடத்தை பிடிப்பவை ஆப்பிள் பழங்களே. ஆப்பிளில் நீர்ச்சத்து, புரதச்சத்து, குளோரோபில்,

மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் பல ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன.

இவை செரிமானப் பாதையில் ஏற்படும் என்சைம்கள் குறைபாட்டை சீர் செய்வதுடன், பலவிதமான வயிற்றுக் கோளாறுகள் வருவதை தடுக்கின்றன. மது அருந்துபவர்களுக்கு ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவை குறைக்க ஆப்பிள் பெருமளவு உதவுகிறது. விஸ்கி எனப்படும் மதுவிலுள்ள பல சத்துக்கள் ஆப்பிளில் காணப்படுவதால், தொடர்ந்து ஆப்பிளை சாப்பிட்டு வர விஸ்கி அருந்தும் எண்ணம் கட்டுப்படும்.

தோல் நீக்காத ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படும் பழச்சாறு ரத்தத்தை சுத்தம் செய்து, ரத்தத்தில் கலந்துள்ள அதிக அமிலத்தன்மையை நடுநிலைப் படுத்துகிறது. வயிறு தொல்லை உள்ளபோது இனிப்பு சேர்க்காத ஆப்பிள் பழச்சாற்றை சாப்பிட்டு வர, வயிற்றிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம், கார்பானிக் அமிலமாக மாற்றப்பட்டு நெஞ்சுக்கரிப்பு கட்டுப்படுகிறது; செரிமான திறன் அதிகரிக்கிறது.

ஆப்பிளிலுள்ள மாலிக் அமிலம், மலச்சிக்கலை நீக்கி குடற்பாதையிலுள்ள நுண்கிருமிகளை கொல்கிறது. ஆப்பிளை நன்கு மென்று சாப்பிட வாய் மற்றும் தொண்டைப் பகுதியிலுள்ள நுண்கிருமிகள் நீங்குகின்றன. வயதானவர்களுக்கு ஆப்பிள் மேல்தோல், செரிக்கக் கடினமாக இருக்குமென்பதால் தோலை நீக்கி உட்கொள்வது நல்லது. ஆப்பிளை அன்றாடம் உட்கொண்டு வந்தால், மருத்துவரை அணுக வேண்டாம்.

நீர்ச்சத்து ஏராளமாக உள்ள ஆப்பிள் பழத்தை கோடைக்காலத்தில் நன்கு உட்கொள்ளலாம். இதில் ஏராளமான மாவுச்சத்து நிறைந்துள்ளதால், சர்க்கரை நோயாளிகள் தங்கள் சரிவிகித சம உணவுக்கு ஏற்றவாறு, மருத்துவரின் ஆலோசனை படி ஒன்று அல்லது இரண்டு கீற்றுகள் ஆப்பிளை எடுத்துக் கொள்ளலாம்.

ஆப்பிள் எல்லாப் பருவ காலங்களிலும் கிடைக்கிறது. சிம்லா, காஷ்மீர் பகுதிகளில் மிக அதிகமாகப் பயிரிடப்படுகிறது. ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலியன அடங்கியுள்ளன.

ஆப்பிள் பழத்தில் உள்ள ரசாயனக் கலவைகள் ஒன்றுகொன்று வேதியியல் முறையில் இணக்கமாகச் செயல்படுகிறது. ஆர்கானிக் கலவை இரும்புசத்தை எளிதில் உடல் கிரகிக்க உதவுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us