தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/மோரையும் தயிரையும் அளவாக பயன்படுத்துங்க!

மோரையும் தயிரையும் அளவாக பயன்படுத்துங்க!

மோரையும் தயிரையும் அளவாக பயன்படுத்துங்க!


PUBLISHED ON : ஜூலை 26, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 26, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியர்களின் உணவில் பால், தயிர், மோர் இவை மூன்றும் தவிர்க்க முடியாத பதார்த்தங்கள். அதிக ஊட்டச்சத்து உள்ள உணவாக மட்டுமில்லாமல், ஆரோக்கியமான உணவாகவும் உள்ளது. அதே நேரத்தில் பால் பொருட்களை அதிகம் சாப்பிட்டால், உடலுக்கு உபாதைகளும் உண்டு. கொலஸ்ட்ரால் போன்ற பல பிரச்னைகள் வரவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, தயிர் சாப்பிடும் போது அளவாக பயன்படுத்த வேண்டும். தயிரை விட மோர் பயன்படுத்துவது சிறந்ததாகும். தயிர் குளிர்ச்சி என, நினைத்து பலர் சாப்பிடுகின்றனர். அதை பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக்கியும் சாப்பிடுகின்றனர். ஆனால், அது உண்மை இல்லை. தயிர் உடல் சூட்டை அதிகமாக்கும். பிரிட்ஜில் வைத்தால் சூடு மேலும் அதிமாகும்.

தயிரில் உள்ள நன்மைகள் குறைவு. தயிர் சாப்பிட்டால் மலச்சிக்கல் வரும். உடலில் கொழுப்பைக் கூட்டி, ஏகப்பட்ட உபாதைகளைக் கொடுக்கும். ஹார்மோன்களின் சுரப்பை அதிகமாக்கும். கண்டிப்பாக தயிரை இரவில் சாப்பிடக்கூடாது. பனி கொட்டும் புரட்டாசி, ஐப்பசி, மார்கழி மாதங்களிலும், கோடை துவங்கும் தை, மாசி, பங்குனி, சித்திரை மாதங்களிலும் சாப்பிடக்கூடாது. ரொம்ப ஜில்லென்றும் சாப்பாட்டில் சேர்த்துச் சாப்பிடக்கூடாது. சரியாக உறையாத அல்லது புளித்துப்போன தயிரையும் சாப்பிடக்கூடாது.

தயிரை விட மோர் சிறந்ததாகும். வெறுமனே தயிரில் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டால், அது மோர் ஆகிவிடாது. தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்துவிட்டு, எஞ்சியிருக்கும் தயிரில், சரிபங்கு தண்ணீரைச் சேர்த்து நன்கு கலக்கினால்தான் மோர் கிடைக்கும். மோர்

எளிதாக ஜீரணமாகிற உணவு. சாப்பிட்ட பிறகு மோர் குடிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

மூல நோய்க்கு மோர் பிரமாதமான மருந்து. வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறுகளுக்கும் மோர் சிறந்த மருந்து. மோர் குடித்தால் உடனே பசி எடுக்கும்.

வெயிலால் உடம்பு சூடாகி, சிறுநீர் பாதையில் எரிச்சல் உண்டானால் அதற்கும் நல்ல மருந்து மோர்தான். ரத்தசோகைக்கும் மோர் நல்லது. நம்மை அறியாமல் சாப்பிடும் மோசமான உணவுப் பொருட்கள் மூலம், உடலில் சேரும் விஷத்தை அகற்றும் சக்தி மோருக்கு உண்டு. சளி தொந்தரவு, தொண்டை எரிச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும்போது மோர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மோர் சாதம் சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டுத் தாளித்து, அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, சீரகப் பொடியும் மஞ்சள் தூளும் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இந்த தண்ணீர் ஆறியதும், இதில் மோரைக் கலந்து குடிக்கலாம். ஆனால், மோரை நேரடியாகச் சூடு பண்ணக்கூடாது. தினம் மதிய வேளை, 200 மில்லி மோர் அருந்தினால் உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us