தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/உடல் பருக்க நேந்திரனில் இருக்கு மந்திரம்!

உடல் பருக்க நேந்திரனில் இருக்கு மந்திரம்!

உடல் பருக்க நேந்திரனில் இருக்கு மந்திரம்!


PUBLISHED ON : பிப் 19, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 19, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆண்டு முழுவதும் தடை இல்லாமல் கிடைக்கும் பழம் இது. தினமும் இரண்டு வாழைப்பழங்கள் சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் இயல்பாக இருக்கும். வாழைப்பழத்தில் சோடியமும், கால்சியமும், மிக குறைவாக இருக்கின்றன. பொட்டாசியமும் மக்னீசியமும் அதிக அளவில் இருக்கின்றன. இது, உடலின் சமநிலையை பாதுகாக்க உதவும்.

தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வருவோரின் உடல், நன்கு மெருகேறி பளபளப்புடன் இருக்கும். சரும நோய்களும் வராது. சொறி, சிரங்கு போன்ற குறைபாடுகள் உடல் சருமத்தில் ஏற்படாது. தினந்தோறும் இரவில் படுக்கச் செல்லும் போது, வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் சரும நோய்கள் முற்றிலுமாக அகன்று, உடல் நல்ல மென்மை அடையும். மலச்சிக்கல் நிரந்தரமாக தீரும். இதுபோன்ற பொதுத்தன்மை எல்லா வாழைப்பழங்களிலும் உள்ளன.

செவ்வாழை: செவ்வாழைப்பழம் பல வகைகளில் சிறந்ததாகவும், பல வியாதிகளைக் குணப்படுத்தும் சக்தி வாய்ந்ததாகவும் உள்ளது. தினம்தோறும் ஒரு செவ்வாழைப் பழம் வீதம், தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் போதும். உடலில் புதிய ரத்தம் உற்பத்தியாகும்.

நரம்புகளுக்கு நல்ல பலம் ஏறும். உடலில் புதிய சுறுசுறுப்பும், மனதில் உற்சாகமும் உண்டாகும். ஒரு புதிய மனிதனாகவே, மாறிவிட முடியும். இந்த அரிய, பெரிய சக்தி, செவ்வாழைப்பழம் ஒன்றுக்குத்தான் உண்டு. நோய்க்கிருமிகளை எதிர்த்தழிக்கும் ஆற்றல் செவ்வாழைக்கு உண்டு. பல், எலும்பு போன்ற உறுப்புகளை வலிமைப்படுத்தி உடலை ஆரோக்கிய நிலையில் வைத்திருக்கும்.

பூவன்: உடலுக்கு சக்தி அளிப்பதில், பூவன் வாழைப்பழத்துக்கு நிகர் வேறு இல்லை. இந்தப் பழம் உடலுக்கு பலத்தைத் தரும். ரத்த விருத்தி உண்டாக்கும்; மலச்சிக்கலைப் போக்கும். இரவு உணவை நீக்கி, மூன்று பூவன் வாழைப்பழத்தை உண்டு, சிறிது நேரம் கழித்து, வெந்நீர் அருந்தி வந்தால், நல்ல பலம் கிடைக்கும்.

ரஸ்தாளி: ரஸ்தாளி வாழைப்பழம், ருசியும் சத்தும் நிறைந்தது. அஜீரணத்தினாலும், உஷ்ணத்தினாலும் ஏற்படும், வயிற்றுப் போக்கை நீக்க, ரஸ்தாளி வாழைப்பழத்தை, தண்ணீரில் கரைத்து, மூன்று வேளை சாப்பிட்டால் போதும்.

மொந்தன் வாழை: மொந்தன் வாழைப்பழம், காமாலை நோயை குணப்படுத்தும் இயல்புடையது. உடல் உஷ்ணத்தை சமன்ப்படுத்தும். பித்தத்தை போக்கும் தன்மையுடையது.

மலை வாழை: இதற்கு ஒரு தனித் தன்மையும், ருசியும், வாசனையும் இருக்கும். தினந்தோறும் பகல், இரவு ஆகாரத்துக்குப்பின், ஒரு மலைப்பழம் வீதம் சாப்பிட்டு வந்தால், உடலில் புதிய ரத்தம் உண்டாகும். உடல் பலம்பெறும். உண்ட ஆகாரம் நல்ல முறையில் ஜீரணமாகும். மலச்சிக்கல் ஏற்படாது. மலம் சுலபமாக இறங்கும்.

நேந்திரன்: நேந்திரன் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நல்ல பசி உண்டாகும். ஆகாரத்தின் மேல் ஆர்வம் உண்டாக்கும். உண்ணும் உணவு, நல்ல முறையில் ஜீரணமாகும். உடல் இளைத்தவர்கள் நேந்திரன் பழத்தை இட்லி தட்டில், அவித்து நெய்தொட்டு உண்டு வந்தால், உடல் தடித்து அழகு பெறுவர்.

பச்சை வாழை: நாடன் என்னும் பச்சை வாழை, குளிர்ச்சி இயல்பினை உடையது. இதை அனைவரும் சாப்பிடலாம். ஆனால் சீதள சரீரம் உள்ளவர்க்கும், வாத நோயாளிகளுக்கும் ஒத்துக் கொள்வதில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us