தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மாத்தியோசி: மயக்கும் விழி என நினைத் கவனிக்காமல் இருக்காதீர்கள்!

மாத்தியோசி: மயக்கும் விழி என நினைத் கவனிக்காமல் இருக்காதீர்கள்!

மாத்தியோசி: மயக்கும் விழி என நினைத் கவனிக்காமல் இருக்காதீர்கள்!


PUBLISHED ON : அக் 16, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 16, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

\'அவளுடைய கண்ணைப் பாரேன்... அரைக் கண்ணைத் திறந்து, பார்ப்பவரை மயக்குகிறாள்...' என, யாராவது உங்களைப் பார்த்துப் புகழ்ந்து பேசினால், புகழ்ச்சிக்கு மயங்கி விடாதீர்கள். அரைக்கண் மட்டுமே திறக்கும் நிலையில் உள்ள தன்மைக்கு, 'மந்தக் கண்' என்று பெயர். உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவை. கண்ணை கவனிக்காமல் போனால், என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என்பது குறித்து, வாசன் கண் மருத்துவமனை மருத்துவ அதிகாரி டாக்டர் அரவிந்த் கூறுவதாவது:



* ஆண்டுதோறும், அக். 13ம் தேதியை உலக பார்வை தினமாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.



* உலகளவில் ஒவ்வொரு 5 நொடிக்கு ஒருவர் பார்வை இழக்கிறார். ஒரு நிமிடத்துக்கு ஒரு குழந்தை பார்வை இழக்கிறது. ஆண்டு தோறும் எழுபது லட்சம் மக்கள் பார்வை இழக்கின்றனர்.



* உலகம் முழுவதும் 18 கோடி பேருக்கு பார்வை குறைபாடு உள்ளது. இவர்களில், 4.5 கோடி பேர் பார்வை இல்லாதவர்கள். வரும் 2020ல் இந்த எண்ணிக்கை இரு மடங்கு உயரும் என அஞ்சப்படுகிறது.



* முன்தடுப்பு நடவடிக்கையால், 20 சதவீதம் பேருக்கு பார்வை குறைபாடு ஏற்படுவதை தவிர்க்கலாம்.



* உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவதன் மூலம் 60 சதவீதம் பேருக்கு பார்வை குறைபாட்டை சரி செய்யமுடியும்.



* குழந்தை பருவத்தில் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்க வைட்டமின் ஏ-யை கூடுதலாக கொடுக்க வேண்டும்.



* பள்ளி மாணவர்களிடையே, 24 சதவீத குழந்தைகளுக்கு பார்வைக் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 13 சதவீதம் பேருக்கு மந்தக் கண் (ஃச்த்தூ ஞுதூஞு) நோய் ஏற்பட வாய்ப்புள்ளதும் தெரிய வந்தது. குறிப்பிட்ட வயதை தாண்டிவிட்டால், மந்தக்கண் நோய் சரி செய்ய முடியாத நோயாக மாறிவிடும். இக்குறைபாடு, ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் வருகிறது. 'க்ளூக்கோமா' நோய், அறிகுறியே இல்லாமல் முற்றிய நிலையில் கண்டுபிடிக்கப்படுவதால் பார்வை இழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்வது அவசியம்.



எனக்கொண்ணும் சர்க்கரை அதிகமில்லே!: சர்க்கரை நோய் உள்ளவர்கள், சமீபத்திய பரிசோதனைகளில், தங்கள் உடலில் சர்க்கரை அளவு சரியாக இருப்பின், தனக்கு நோய் தீர்ந்து விட்டதாக நினைக்கின்றனர். உண்மையிலேயே, நோய் தீருமா?

சர்க்கரை நோய் தாமதமின்றி கண்டறியப்பட்ட ஆரம்ப கட்டத்தில் எந்தவிதமான மருந்துகளும் உட்கொள்ளாமல், வெறும் உணவுக் கட்டுப்பாட்டிலேயே, பல மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை இருக்க முடியும்.

இந்தக் கால கட்டத்தில் தங்கள் சர்க்கரை நோய் குணமாகி விட்டதாக பெரும்பாலானோர் நினைத்து, தேவையற்ற உணவுகளை உட்கொண்டு, சர்க்கரை அளவை அதிகப்படுத்திக் கொள்கின்றனர். சர்க்கரை நோய், முற்றிலும் குணமாகக் கூடியது அல்ல.



இஞ்சியின் பயன் என்ன?: ஜீரணக் கோளாறு, வாந்தி, இருமல், பயணக் களைப்பு, வயிற்றுப் போக்கு, வயிறு உப்புசம், உணவு நச்சு ஆகியவற்றை நீக்கும் திறன் கொண்டது இஞ்சி. ரத்த ஓட்டத்தையும் தூண்டக் கூடியது. காய்ச்சலை நீக்கும். தலையில் நீர் கோர்த்தால், இஞ்சிப் பற்று போட்டு குணமாக்க முடியும். ஆங்கிலத்தில் இதற்கு, 'ஜிஞ்ஜர்' என்று பெயர்.

இஞ்சியை வீட்டில் வளர்க்கலாமா? தாராளமாக. இதன் தாய் கண்டம் ஆசியா தான். வெப்ப மண்டலப் பகுதியில், வளரும் தன்மை உடையது. கடைகளில் கிடைக்கக் கூடிய, இஞ்சித் துண்டையே, மண்ணுக்கு அடியில், அமிழ்த்திப் புதைத்து வைத்து, தினமும் நீர் ஊற்றி வந்தால், இஞ்சிச் செடி வளரும். 10 மாதத்தில் கணிசமான அளவு, தரைக்கு அடியில் இஞ்சி வளர்ந்திருக்கும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us