தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/நோய் போக்கும் மூலிகை சாறு!

நோய் போக்கும் மூலிகை சாறு!

நோய் போக்கும் மூலிகை சாறு!


PUBLISHED ON : ஜன 01, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 01, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மூலிகை சாறு, உடலில் உள்ள பல்வேறு நோய்களை போக்கி சுவாசத்துக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. எந்த மூலிகைகளுக்கு என்ன மருத்துவ குணம் உள்ளது என்பதை தெரிந்து கொண்டால் நாம் பயன்படுத்த வசதியாக இருக்கும்.

அருகம்புல் சாறு, ரத்தத்தை சுத்தம் செய்து நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. அமிலத்தன்மையை குறைக்கிறது. மலச்சிக்கலை நீக்குகிறது. ஆண்மை, தாது விருத்தி, இருமல், வயிற்றுவலி, மூட்டுவலி, இதயக்கோளாறு, தோல் வியாதிகளை நீக்குகிறது. அருகம்புல் பச்சையம் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரித்து ரத்த விருத்தியை உண்டாக்குகிறது. வாய் துர்நாற்றம், பல் நோய்கள், சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது.

ஆஸ்துமா, ரத்த அழுத்தம் ஆகியவைகளை குறைக்கிறது. தாய்பால் அதிகரிக்க செய்கிறது. உடலில் உள்ள நச்சு தன்மையை அகற்றுகிறது. கொழுப்புச் சத்து குறைந்து உடல் எடை குறையும். துளசி இலைச்சாறு காய்ச்சல், இருமல், ஜீரணக் கோளாறுகள், ஈரல் சம்பந்தமான நோய்கள், காது வலி ஆகியவற்றை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்கிறது.

தூதுவளை இலைச்சாறு மார்புச் சளியை அகற்றும். நரம்புத் தளர்ச்சி மறையும். மூளை வளர்ச்சி, நினைவாற்றல் அதிகரிக்கும். தோல் நோய்கள் மறையும். மஞ்சள் கரிசலாங்கண்ணிச் சாறினால் கண்கள் நல்ல பார்வை பெறும். மூளைக்குச் சுறுசுறுப்பைத் தந்து அறிவு தெளிவு ஏற்படும். காமாலை தீரும், மலச்சிக்கல் நீங்கும்.

பொன்னாங்கண்ணி இலைச்சாறு உடலுக்கு வலு ஊட்டுவதோடு பொன்போல் பளபளக்கும் தன்மையை அளிக்கும். கண்ணொளி அதிகரிக்கும். வாதநோய்கள் மறையும். உடல் சூடு குறையும். வல்லாரை இலைச்சாறு நினைவாற்றல் வளரும். நரம்புத் தளர்ச்சி அகலும். வயிற்று நோய்கள், குடல் நோய்கள் நீங்கும். தாது விருத்தியாகும். சிறுநீர் நன்கு பிரியும். இருதயம் வலுவாகும்.

வில்வ இலைச்சாறு காய்ச்சல் குறையும், நீரழிவு குறையும், வயிற்றுப்புண்கள் ஆறும். நல்ல பசி எடுக்கும். மந்த புத்தி மாறும். மஞ்சள் காமாலை நீங்கும். முசுமுசுக்கை இலைச்சாறு பயன்படுத்துவதால் இருமல், சளி, மூக்கில் நீர் ஒழுகுதல் குறையும். நுரையீரல் நோய்கள் குறையும்.

புதினா இலைச்சாறு வாய்ப்புண், வயிற்றில், குடலில் புண்கள், சளி, கபம், இருமல் குறையும். புற்றுநோய்கள் குறையும், வெண்குஷ்டம் குறையும். நெல்லிக்காய் சாறு பயன்படுத்தும்போது, தலைமுடி உதிர்வது குறையும், தும்மல், இருமல், சளி, கண்நோய், பல் நோய்கள் குறையும். நன்கு பசிக்கும். இதயநோய்கள், நீரழிவு குறையும். உடல் பலமின்மை, தோல் நோய்கள் குறையும்.

வாழைத்தண்டுச் சாறு சிறுநீர் அடைப்பு, சிறுநீரக சம்பந்தமான நோய்கள் குறையும். ரத்த அழுத்தம் குறையும். தொந்தி குறையும். அமிலத்தை குறைக்கும். உடல், கை, கால் வீக்கம் குறையும். பாம்புக்கடி, வண்டுக்கடி நச்சுக்கள் குறையும், ரத்தம் சுத்தமாகும்.

சாம்பல் பூசணிக்காய் சாறு பெண்களுக்கு மாதவிடாய் நோய்கள், கர்ப்பப்பை நோய்கள், வயிற்றுப்புண்கள், அமிலத்தைக் குறைக்கும்.

கேரட் சாற்றை குடித்தால் கண்பார்வை ஒளி பெறும். கண்நோய்கள், பல்நோய்கள் குறையும். அமிலத்தைக் குறைக்கும்.

அரச இலைச்சாறு மலச்சிக்கல், உடல் சூடு, கர்ப்பப்பை நோய்கள் குறையும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us