தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/திராட்சையில் அருமருந்து

திராட்சையில் அருமருந்து

திராட்சையில் அருமருந்து


PUBLISHED ON : ஏப் 16, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 16, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திராட்சையை, கொடிமுந்திரி என்றும் அழைப்பர். திராட்சை ரசத்தில் இருந்து பல வகையான மருந்துகளும், டானிக்குகளும் தயாரிக்கப்படுகின்றன. இதனால், இதற்கு 'டானிக் புரூட்' என்ற பெயரும் உண்டு.

குடல் புண், கல்லீரல், மண்ணீரல் கோளாறு உள்ளவர்கள், இதன் பழ சாறை, மூன்று வேளையும், அரை அவுன்ஸ் வீதம் பருகினால், குணம் பெறலாம். அன்றாட வாழ்வில் திராட்சையை சேர்த்துக் கொண்டால், உடலுக்கு ஏராளமான நன்மைகளை கொடுக்கிறது.

திராட்சையில், கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என, பல வகைகள் உண்டு. எந்த திராட்சையாக இருந்தாலும், நோய்களை குணப்படுத்தும் சக்தி உண்டு. குறிப்பாக, அல்சருக்கு அருமருந்து. மலச்சிக்கல் இருக்காது: காலையில், திராட்சை சாறு குடித்து வந்தால், வேறெந்த மருத்துவ சிகிச்சைக்கு கட்டுப்படாத வயிற்றுப்புண், முழுமையாக குணமாகும். இதேபோல், தலைச்சுற்றல், மலச்சிக்கல், கை கால் எரிச்சல் உள்ளவர்களும், திராட்சையை பழமாகவோ, சாறாகவோ உட்கொள்ளலாம்.

மலச்சிக்கலை சரி செய்ய, திராட்சை நல்ல மருந்து. மலச்சிக்கல் உள்ளவர்கள் உலர் திராட்சையை இரவு உறங்கும் முன் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால், மறுநாள் காலை பலன் தெரியும். இதே பிரச்னை குழந்தைகளுக்கு இருந்தால், சிறிதளவு தண்ணீரில், உலர் திராட்சையை இரவில் ஊறப்போட்டு, காலையில் பிசைந்து, அதன் சாறு மட்டும் குடிக்க கொடுத்தாலே, பிரச்னை சரியாகி விடும்.

கர்ப்பிணி பெண்களுக்கு, குமட்டல், வாய்க்கசப்பு இருக்கும் நேரங்களில், திராட்சை சாப்பிட்டால் பலன் கிடைக்கும். எடை குறைவாக இருக்கிறவர்கள், உடம்பில் சூடு அதிகம் உள்ளவர்களும், திராட்சையை சாப்பிடலாம். ரத்த சுத்திகரிப்பில் பங்கு வகிக்கிறது.

சரும பாதிப்புக்கு தீர்வு: பழச்சாறில், சூரிய வெப்பத்திலிருந்து தாக்கக் சூடிய சரும பாதிப்புக்கள் மற்றும் கதிர்களிடமிருந்தும், வெப்பத்தால் வரும் கட்டிகளிலிருந்தும் பாதுகாக்கும் தன்மை கொண்டது. திராட்சை சாறு, இயற்கையாவே சருமப் பிரச்னைகளை வர விடாமல் தடுக்கும் சக்தி கொண்டது. பொதுவாக, வெயில் காலத்தில் தினமும் ஒரு குவளை திராட்சை சாறு அருந்துவது சிறந்தது.

திராட்சை சாறு, இறந்த தோலை நீக்குவதில் உதவக் கூடியது. சருமத்தில் தேய்த்தால், இறந்த திசுக்களை நீக்கி, சுருக்கங்கள் அற்று இயற்கையாக காணப்படும். நல்ல ரத்த ஓட்டத்தால், சருமத்தின் நீட்சித்தன்மையையும் அதிகரிக்கிறது. திராட்சை சாறு, ஈரப்பதத்தை சருமத்துக்கு இயற்கையாகவே கொடுக்கிறது.

கருவளையம் மறைய...! காலை எழுந்தவுடன் திராட்சை ரசம் ஒரு கோப்பை பருகி வந்தால், நாட்பட்ட தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். மாதவிடாய் கோளாறுடைய பெண்களும், கர்ப்பிணிகளும், தினமும் காலை, வெறும் வயிற்றில் திராட்சை ரசம் பருகுவது நல்ல பலனளிக்கும்.

கண்களின் கருவளையம் மறைய, திராட்சையை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவி, 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வழியை பயன்படுத்தி, கண்களை சுற்றி உள்ள பகுதியில் கருவளையங்கள் வர விடாமல் தடுக்க முடியும்.

பொலிவான முகத்தை பெற விரும்பினால், திராட்சை பழச்சாற்றை பிழிந்து எடுத்த பின், மீதம் உள்ள சக்கையை தூக்கி போடாமல், முகத்தில் பசையைப் போன்று பூசி, சிறிது நேரத்துக்கு பின் கழுவ, சிறந்த பலன் கொடுக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us