sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

பால் ஆவியில் வேக வைத்த நிலப்பனங்கிழங்கு!

/

பால் ஆவியில் வேக வைத்த நிலப்பனங்கிழங்கு!

பால் ஆவியில் வேக வைத்த நிலப்பனங்கிழங்கு!

பால் ஆவியில் வேக வைத்த நிலப்பனங்கிழங்கு!


PUBLISHED ON : ஜூலை 20, 2025

Google News

PUBLISHED ON : ஜூலை 20, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்வேறு மருத்துவக் காரணங்களால், இரு பாலரிடமும் இயற்கை கருவாக்கத் திறன் குறைந்து வருகிறது. பல சமூக காரணங்களால், ஆண்களுக்கு இருக்கும் குழந்தையின்மை பிரச்னைகள் பற்றிய புரிதல் இல்லை.

இதனால், சிகிச்சை எடுத்துக் கொள்ள பெரும்பாலான ஆண்கள் முன் வருவதில்லை. ஆண்களிடம் பொதுவாக காணப்படும் பிரச்னை விந்தணுக்கள் குறைபாடு. இதற்கு மரபணு காரணிகள், டெஸ்டிஸ் வளர்ச்சி குறைபாடு, விந்து குழாய் அடைப்பு, சிறு வயதில் ஏற்பட்ட அம்மை, மலேரியா காய்ச்சல்களின் பாதிப்பு, புராஸ்ட்ரேட் சுரப்பி பாதிப்புகள், ஹார்மோன் குறைபாடு, தீவிர குதிரையேற்றம், சைக்கிள் பயிற்சியும் விந்தணு உற்பத்தியை பாதிக்கலாம்.

மாறி வரும் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை மாற்றம், அதிகரிக்கும் வெப்பம், காற்று மாசு, மன உளைச்சல், துாக்கமின்மை, சிகரெட், மது பழக்கமும் விந்தணு உற்பத்தியை பாதிக்கின்றன.

சித்த மருத்துவத்தில் விந்தணுக்களை பெருக்கக்கூடிய நிலப்பனங்கிழங்கு, பூமி சர்க்கரை கிழங்கு, நெருஞ்சில், பூனைக்காலி விதை, கழற்சிக் கொட்டை, ஓரிதழ் தாமரை, தாமரை மகரந்தம், தண்ணீர்விட்டான் கிழங்கு, அமுக்குரா கிழங்கு, தேற்றான் கொட்டை என பட்டியல் நீள்கிறது. சிலாசத்து பற்பம், நாக பற்பம், குங்குலிய பற்பம், அயகாந்த செந்துாரம் என பல உயர் தாது மருந்துகளும் உள்ளன.

சித்த மருத்துவத்தில் நிலப்பனங்கிழங்கு என்ற மூலிகை கிழங்கின் மேல் தோலை நீக்கி, பசும்பாலின் ஆவியில் வேக வைத்து, உலர்த்தி பொடியாக்கி, சூரணமாக பயன்படுத்துவர். இச்சூரணத்தை அரை தேக்கரண்டி அளவு எடுத்து, பசும்பாலுடன் கலந்து, தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட வேண்டும். இதனால், உடல் பலம் அதிகரிப்பதோடு, விந்தணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று சித்த நுால்கள் மட்டுமல்ல; ஆய்வுகளும் உறுதி செய்கின்றன.

இத்துடன் சத்தான பாரம்பரிய உணவுகள், வைட்டமின் சி, ஈ, டி, துத்தநாக சத்துக்கள் நிறைந்த கருப்பு உளுந்து, கருப்பு எள், கருப்பு கொண்டைக்கடலை, வேர்க்கடலை, முளை கட்டிய பயறு, கம்பு, கேழ்வரகு, மாப்பிள்ளை சம்பா அரிசி, வெந்தயம், கசகசா, வெள்ளரி விதை, சின்ன வெங்காயம், வெள்ளை பூண்டு, முருங்கை கீரை பூ, மாதுளை, கொய்யா, அத்திப்பழம் தினமும் உணவில் சேர்ப்பது, மிதமான உடற்பயிற்சி, ஏழு மணி நேர ஆழ்ந்த துாக்கம், வாரம் இரு முறை நல்லெண்ணெய் குளியல் அவசியம்.

மூலிகைமணி அபிராமி

மூலிகைமணி சித்த மருத்துவ மையம்96000 10696, 90030 31796, consultabirami@gmail.com






      Dinamalar
      Follow us