PUBLISHED ON : ஜூன் 15, 2025

நீரிழிவு, முதுமை, உடல் பருமன் காரணமாக, நாள்பட்ட காயங்களுடன் ஏராளமானோர் அவதியுறுகின்றனர். இது, பெரும்பாலும் கவனிக்கப்படாத சுகாதார நெருக்கடியாகும்.
காய பராமரிப்பு, காயங்களை மூட உதவுதல், திசுக்களைப் புதுப்பித்தல் மற்றும் வடு மேலாண்மை, தற்போது புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கின்றன. காயங்களை விரைவாக குணப்படுத்துதல், தொற்றுக் கட்டுப்பாடு, காயங்களை சரியான வகையில் குணப்படுத்தி பாதுகாப்பாக மூட வழிவகை செய்தல், வடுவின் அடையாளத்தை குறைத்து தோல் மீட்புக்கு உதவுதல், சேதமடைந்த திசுக்களை திறம்பட மீட்டெடுக்க உதவுதல் அவசியமானது.
அவதிப்படும் மக்கள்
நம் நாட்டில், 1,000 நபர்களில் 10.5 நபர்களுக்கு ஆழமான காயங்கள் காணப்படுகின்றன. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 2025ம் ஆண்டுக்குள் 40 கோடியைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது இதன் விளைவாக, 25 சதவீதம் நோயாளிகளுக்கு கால் புண்கள் ஏற்படுகின்றன, மேலும், 15 சதவீதத்தினர் ஊனத்தை எதிர்கொள்கின்றனர். இது இறப்பு விகிதத்தை, 9.6 சதவீதம் அதிகரிக்கிறது, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டியிருப்பதால், செலவுகள் கணிசமாக அதிகரிக்கின்றன.
குணப்படுத்தும் கருவி
சிக்கலான காயங்கள் பராமரிப்புக்கு ஒருங்கிணைந்த ஒரு தளத்தை உருவாக்குவதில் 'மெட்வைட்டல்' (MedVital) என்ற ஸ்டார்ட் அப் கவனம் செலுத்துகிறது. இதன் முதன்மை தயாரிப்பான 'நோவுண்ட்', நாள்பட்ட காயங்களை துல்லியமாகக் கட்டுப்படுத்தி குணப்படுத்த உதவும், 'எதிர்மறை அழுத்த காய சிகிச்சை' சாதனமாகும். இது மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் வீடுகளில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் நவீனத் தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கிறது. காயத்தின் அளவை குறைத்து குணப்படுத்தும் செயல்முறையை விரைவாக்குகிறது.
குணப்படுத்தும் திசுக்களை அழுத்துகிறது; இதனால் செல் பிரிவுகள் ஏற்பட காரணமாகிறது. உற்பத்தி மற்றும் புதிய ரத்த நாளங்கள் உருவாகுதலை ஊக்குவிக்கிறது. காயத்திலிருந்து அதிகப்படியான திரவத்தை நீக்குகிறது. இந்திய காயம் பராமரிப்பு சந்தை 2033ம் ஆண்டுக்குள், ஆண்டுதோறும் 6.4 சதவீதம் வளர்ந்து 16 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சேதுராமன் சாத்தப்பன்
இணையதளம்: www.themedvital.com.
உங்கள் சந்தேகங்களுக்கு:
இ-மெயில் Sethuraman.sathappan@gmail.com;
மொபைல்போன்: 9820451259;
இணையதளம்: www.startupandbusinessnews.com