sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

கடும் மலச்சிக்கல் போக்கும் கடுக்காய்!

/

கடும் மலச்சிக்கல் போக்கும் கடுக்காய்!

கடும் மலச்சிக்கல் போக்கும் கடுக்காய்!

கடும் மலச்சிக்கல் போக்கும் கடுக்காய்!


PUBLISHED ON : பிப் 21, 2016

Google News

PUBLISHED ON : பிப் 21, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம் உணவு பழக்கம், இயற்கையான முறையில் இருந்தவரை எந்த ஒரு பெரிய நோயும் அண்டவில்லை. நம் மூதாதையர் சாப்பிட்ட உணவுகளில் எந்த ரசாயனமும் கலந்திருக்கவில்லை. சுத்தமான காற்றை சுவாசித்து, பரிசுத்தமான நீரை குடித்து, டென்ஷன் இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்தனர். இதனால், அவர்களுக்கு நீடித்த ஆரோக்கியமும், ஆயுளும் கிடைத்தது. இன்றோ நிலைமை தலைகீழ் ஆக மாறி விட்டது.

கால மாற்றத்தால், உணவு கலாசாரம் மாறி போனதால், பல்வேறு நோய்களால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடுக்காய் இயற்கை வைத்தியத்தில், முக்கியமான மருந்து பொருளாக பயன்படுகிறது. இது பல்வேறு நோய்களை போக்கும் தன்மையுடையது. கடுக்காயை மருந்துக்கு பயன்படுத்தும் போது, அதில் உள்ள கொட்டையை நீக்கி விட்டு, சதை பகுதியை மட்டுமே படுத்தவேண்டும்.

வாய், தொண்டை, இரைப்பை, குடல் ஆகிய உறுப்புகளில் ஏற்படும் புண்ணை ஆற்றும் தன்மை உடையது கடுக்காய். மலச்சிக்கலைப் போக்கி, குடல் மற்றும் ஜீரண உறுப்புகளை பலப்படுத்துகிறது. பசியைத் தூண்டி ரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாதம், பித்தம், கபம் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்தும். காது, கண் சம்பந்தமான நோய்களை போக்கும். இருமல், காமாலை, கை, கால் நமைச்சல், இரைப்பு, நாவறட்சி, மார்பு நோய், மூலம், வயிற்றுப்பொருமல், விக்கல் போன்ற பிரச்னைகளை குணப்படுத்தும் சக்தி, கடுக்காய்க்கு உண்டு.

காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என, 48 நாட்கள் இதன் பொடிகளை உட்கொண்டால், உடல் ஊக்கம் பெற்று, நோய் பாதிப்பு இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம். கடுக்காய் ஓட்டை தூளாக்கி, இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரை குடித்து வந்தால், உடல் வலுவாகும்; வாதம் குணமாகும். 3 கடுக்காய் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து, எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து, உப்பு சேர்த்து துவையலாக அரைத்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால், ஜீரணதி அதிகரிக்கும்; மலச்சிக்கல் நீங்கும்.

கடுக்காயை தூளாக்கி, 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்து கொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டுவந்தால், வாதவலி, பித்த நோய்கள் வயிற்று பிரச்னைகைள் குணமாகும். கடுக்காய்த் தோலை, 15 கிராம் எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில் குடித்தால், நான்கு ஐந்து முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.

வயிற்றுப் போக்கு இருப்பவர்கள், கடுக்காயை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மலச்சிக்கல் உள்ளவர்கள், அளவாக பயன்படுத்த வேண்டும். மருத்துவரின் ஆலோசனை பெற்று, கடுக்காயை பயன்படுத்துவது பாதுகாப்பானது.






      Dinamalar
      Follow us