sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/கபத்திலிருந்து காப்பாற்றும் கடுகு தேநீர்!

கபத்திலிருந்து காப்பாற்றும் கடுகு தேநீர்!

கபத்திலிருந்து காப்பாற்றும் கடுகு தேநீர்!


PUBLISHED ON : செப் 07, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 07, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மழைக்காலம் தொடங்கி விட்டதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு வறட்டு இருமல், மார்பு சளி அதிகமாக பாதிக்கிறது. சில குழந்தைகள் மூச்சு விடவே சிரமப்படுவார்கள்.

இது போன்று சளி, இருமல், காய்ச்சல், ஆஸ்துமா, நிமோனியா பாதிப்பு இருந்தால், நம் சமையல் அறையில் எப்போதும் இருக்கும் கடுகு நல்ல தீர்வாக இருக்கும்.

வெறும் வாணலியில் கடுகை வறுத்து, ஆற வைத்து கொரகொரப்பாக அரைத்த பொடியை கண்ணாடி பாட்டிலில் ஈரம் படாமல் வைத்துக் கொள்ளலாம். இதிலிருந்து அரை டீ ஸ்பூன் எடுத்து, ஒன்றரை டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, 45 மில்லியாக குறைந்ததும், வடிகட்டி , சிறிதளவு தேன், நாட்டுச் சர்க்கரை, வெல்லம் என்று ஏதாவது ஒன்றை கலந்து, காலை உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் குடிக்க வேண்டும்.

இருமல், சளி பாதிப்பு அதிகம் இருந்தால், இதே போன்று ஒவ்வொரு வேளையும் புதிதாக தயார் செய்த கடுகு கஷாயத்தை மூன்று வேளையும் உணவுக்கு 30 நிமிடங்கள் முன் குடிக்கலாம். இரண்டு, மூன்று நாட்கள் குடித்தாலே சளி வெளியேறி, மூச்சு விடுவதில் உள்ள சிரமம் குறையும்.

மழை காலங்களில் அனைவருமே வாரம் ஒரு முறை இந்த கடுகு கஷாயத்தை குடிக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, இதில் உள்ள செலீனியம் என்ற வேதிப் பொருள், நுரையீரல் அழற்சியை சரி செய்து, கழிவுகளை வெளியேற்றும் தன்மை உடையது.

சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த கஷாயத்தை குடிக்கலாம்.



டாக்டர் ஆர். மைதிலி, ஆயுர்வேத மருத்துவர், சென்னை 99622 62988drmythiliayur@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us