sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/சிறுநீரக கற்களை வெளியேற்றும் கார்ன் சில்க்!

சிறுநீரக கற்களை வெளியேற்றும் கார்ன் சில்க்!

சிறுநீரக கற்களை வெளியேற்றும் கார்ன் சில்க்!


PUBLISHED ON : ஏப் 05, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 05, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடைகளில் மக்காச்சோளம் வாங்கும் போது கவனித்து இருப்பீர்கள். ஒரு பக்கத்தின் நுனிப் பகுதியில் மெல்லிய சில இழைகள் இருக்கும். இதை 'சோளப்பட்டு' என்று சொல்வர். ஆங்கிலத்தில், 'கார்ன் சில்க்' என்று அழைப்பர்.

வெளிப்புறத்தில் இருக்கும் இந்த இழைகள் சற்று பிரவுன் நிறத்தில் காய்ந்து இருக்கும். அதுவே மக்காச் சோளத்தை உரிக்கும் போ-து, பச்சையாக இழைகள் இருக்கும். பொதுவாக இவற்றை உரித்து, குப்பையில் தான் போடுவோம். இனி மக்காச்சோளம் வாங்கும் போது, நார் போன்று இருக்கும் இழைகளை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதற்கு, சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மையும், சோடியம் உட்பட அளவுக்கு அதிகமான தாதுக்களை, திரவத்தை வெளியேற்றும் தன்மையும் உண்டு. சிறுநீர் வழியாக இவற்றை வெளியேற்றி விடும்.

சிறுநீரகப் பாதையில் ஏற்படும் தொற்றை குணப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.

இவை தவிர, உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு இவற்றைக் கட்டுப்படுத்தும்.

எப்படி பயன்படுத்தலாம்?

சிறிதளவு சோளப்பட்டு எடுத்து, இரண்டு டம்ளர் நீரில் போட்டு, ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து கொதிக்க விட வேண்டும். ஒரு டம்ளர் அளவு குறைந்ததும், வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

தொடர்ச்சியாக 60 நாட்கள் குடிக்க வேண்டும்.

சிறுநீரக கற்களால் ஏற்படும் முதுகு வலி, வயிற்று வலியை குறைப்பதோடு, சிறிய கற்களாக இருந்தால், இயற்கையான முறையில் வெளியேற்றி விடும்.

சி றுநீர் கழிக்கும் போது எரிச்சல், சொட்டு சொட்டாக கழிவது, சிறுநீர் பாதையில் கற்கள் போன்ற பிரச்னை இருப்பவர்கள், தொடர்ந்து இந்த தேநீரை மூன்று நாட்கள் குடித்தால், தொற்று குறைவதைப் பார்க்கலாம்.



டாக்டர் ஆர்.மைதிலி, ஆயுர்வேத மருத்துவர், சென்னை.99622 62988drmythiliayur@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us