
மருவில் இரண்டு வகைகள் உள்ளன. சொரசொரப்பாக, வியர்குரு போல இருப்பதை மரு என்று சொல்வோம். இது வைரஸ் தொற்று. பரவக் கூடியது. மருவில் கையை வைத்து, வேறு பாகத்தில் வைக்கும் போது, அந்த இடத்திலும் மரு வந்து விடும். இன்னொன்று, கழுத்தைச் சுற்றி, கறுப்பாக, குட்டி, குட்டியாக தோலில் இருந்து வரக் கூடிய வளர்ச்சி. இது தொற்று கிடையாது என்பதால் பரவாது. பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்குமே தவிர, மற்றவர்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது.
இரண்டு வைரஸ் வகைகள் மருவை உண்டாக்கும். ஒன்று தோலில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. மற்றது, பிறப்புறுப்பில் பாதிப்பை ஏற்படுதத்தக் கூடியது.
கால்களில் செருப்பு இல்லாமல் நடக்கும் போது, தலையில் இருக்கும் வைரஸ் கிருமிகள் கால்களில் ஒட்டிக் கொள்ளலாம். தொற்று பாதிப்பு உள்ளவர்களை தொட்டு பேசும் போது, கைகளில் வரலாம். தாம்பத்திய உறவின் வாயிலாகவும் பரவலாம்.
மருந்தோ, மாத்திரைகளோ கொடுத்து, மருவை சரி செய்ய முடியாது. பிறப்புறுப்பில் இருந்தால், ரத்தப் பரிசேதனை செய்து, அதற்கேற்ப சிகிச்சை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட இடத்தில் களிம்பு மருந்துகளை பயன்படுத்தி சரி செய்யலாம்.
வெளிப்புறத்தில் தடவும் மருந்துகளால் இரண்டு வாரத்தில், மரு உதிராவிட்டால், லேசர் சிகிச்சை மூலம் மருவை அகற்ற வேண்டியிருக்கும். திரவ நைட்ரஜனை தெளிப்பதால், சிறு மருக்கள் தானாகவே விழுந்து விடும். அளவில் பெரியதாக இருந்தால், அறுவை சிகிச்சை செய்வது ஒன்று தான் வழி.
திரும்ப வருவதற்கான வாய்ப்புகள் 10-15 சதவீதம் உள்ளது. எடுத்த பின், புண் ஆறிய பின், தொடர்ந்து மருந்துகள் தடவ வேண்டியிருக்கும்.
சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள், செல்களில் ஏற்படுத்தும் பாதிப்பால், நிறமிகள் அதிகமாகி விடுவது, இதற்கு ஹைபர் பிக்மென்டேஷன் என்று பெயர். இதனால் தான் தோலின் நிறம் மாறுகிறது. இதைக் காட்டிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை, தினம் நாம் பயன்படுத்தும் லேப்-டாப், கம்ப்யூட்டர், பிரகாசமான விளக்கு ஒளியிலிருந்த வரும் கதிர்கள்.
தோலின் பாதிப்பிற்கு ஏற்ப, மருத்துவரின் ஆலோசனையுடன், அரசு வேலை செய்பவர்களும்தவறாமல் சன் ஸ்கிரீன்பயன்படுத்த வேண்டும்.
தோலின் நிறம் மாறி உள்ளது என்று, அழகு நிலையங்களுக்குச் சென்று 'டீ டோர்ன்', 'பிளீச்' செய்வது தவறான பழக்கம். கடினமான வேதிப் பொருட்களை பயன்படுத்தி, தோலின் அடி ஆழம் வரை அழுத்தம் கொடுக்கும் போது, இயற்கையாக தோலில் உள்ள பாதுகாப்பு அம்சங்களையே பாதித்து விடும்.
ஹார்மோன் மாறுபாடுகளால் தான் பெரும்பாலும் பெண்களுக்க நிறமி குறைபாடு வரும். நீர்க்கட்டிகள் இருக்கும் பெண்களுக்கு, தோலின் நிறம் கறுப்பாக மாறும்; தேவையற்ற ரோமங்கள் முளைக்கலாம்; தலை முடி கொட்டும்.
ஆண்களுக்கு பொடுகு தலையில் இருந்தாலும் முகம், கழுத்துப் பகுதியில் உள்ள தோல் தடித்த, கறுத்து போகும்.உடலில் ஏற்படும் சில வகை கோளாறுகக்கம் தோலின் கறுப்பாக மாறும்.

