தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கழுத்து, முதுகு வலி

கழுத்து, முதுகு வலி

கழுத்து, முதுகு வலி


PUBLISHED ON : ஜன 30, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 30, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை, அதிக துாரம் இரு சக்கர வாகன பயணம்... விளைவு கழுத்து வலி, முதுகு வலி. உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்கள், முதுகுத் தண்டை தாக்கி, வீக்கத்தை ஏற்படுத்தும், 'அங்கிலோசிங் ஸ்பான்டிலிடிஸ்' கழுத்து, முதுகு வலிக்கு இன்னொரு காரணம்.

இந்த பிரச்னை பெண்களை விட, ஆண்களையே அதிகம் பாதிக்கிறது. முதுகின் கீழ்ப் பகுதியில் இரவு நேரத்தில் ஏற்படும் வலி, காலையில் எழுந்தவுடன் வரும் வலி பிரச்னையின் அறிகுறிகள். அதீத வலியுடன், தசைகள் இறுக்கமாக இருக்கும். வழக்கமான வேலைகளை செய்ய ஆரம்பித்த அரை மணி நேரத்தில், தசைகள் தளர்ந்து, வலி குறையும்.

ரத்தப் பரிசோதனை உட்பட சில மருத்துவ சோதனைகளை செய்து, பிரச்னை இருப்பதை உறுதி செய்யலாம். வலி நிவாரணியோடு, வாழ்க்கை முறை மாற்றம், உடற்பயிற்சி என்று ஒருங்கிணைந்த மருத்துவ முறைகள் அவசியம்.

'ஸ்டிராய்டு' அல்லாத வலி நிவாரணிகளை நீண்ட நாட்களுக்கு சாப்பிடும் போது, செரிமான பிரச்னைகள் வரலாம். பிரச்னையை ஏற்படுத்தும் நோய் எதிர்ப்பு அணுக்களின் செயல்பாட்டை தடுக்க, 'பயோலாஜிக்ஸ் இன்ஜினியரிங்' எனப்படும் மரபியல் சிகிச்சை உள்ளது. இது வலியை குறைத்து, முதுகுத் தண்டு, இடுப்பு பகுதியை இயல்பாக செயல்பட வழி செய்யும்; பிரச்னை தீவிரமாவதை தடுக்கும்.

தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சி, சுவாசப் பயிற்சிகள் வலியைக் குறைக்கும். மூட்டு கள், முதுகுத் தண்டின் வளையும் தன்மையை அதிகப்படுத்தும். நீராவி குளியல், நீச்சல் இரண்டும் நல்ல பலனை தரும். தலையணை இல்லாமல் துாங்குவது, கடினமான மெத்தையில் படுப்பது முக்கியம். இது முதுகுத் தண்டிற்கு பாதுகாப்பை தரும். சமச்சீரான உணவு, உயரத்திற்கு தகுந்த உடல் எடை பராமரிப்பு அவசியம்.

டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன்,

முடக்குவியல் சிறப்பு மருத்துவர், சென்னை.

ramkisandy@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us