தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கறை மீது தேவை அக்கறை

கறை மீது தேவை அக்கறை

கறை மீது தேவை அக்கறை


PUBLISHED ON : ஏப் 30, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 30, 2017


Follow on Google
அ நிறம் | அளவு

வீடு, துணி, பாத்திரம் போன்றவற்றில் ஏற்படும் கறைகளை சுத்தம் செய்து, பராமரிப்பது என்பதே சிக்கலான ஒன்று. இதை சில உபயோகமான வீட்டு குறிப்புகளை தெரிந்துகொள்வதன் மூலம் எளிமைப்படுத்தலாம், என்கிறார் பீளமேடு பகுதியை சேர்ந்த ரெஜீ.

எளிமையான வீட்டு குறிப்பு டிப்ஸ்

தோசைக்கல்லில் எண்ணெய் பிசுபிசுப்பு போக்க, தோசைக்கல் அல்லது வாணலி மிதமான சூட்டில் இருக்கும் போது, அவற்றின் மேற்பரப்பில் சிறிது மோர் விட்டு தேங்காய் நாரினால் அழுத்தித் தேய்த்துக் கழுவினால், எண்ணெய் பிசுபிசுப்பு சட்டெனப் போய்விடும்.

துணியில் உள்ள வெற்றிலைக் கறையை போக்க, எலுமிச்சம் பழத்தின் தோல் அல்லது புளித்த மோரை தடவினால், கறை மாயமாகி விடும். தவிர, கறை இருந்த இடத்தில் ஒரு ஸ்பூன் யூகலிப்டஸ் எண்ணெய் விட்டு அரை மணி நேரம் கழித்து சோப்பு நீரில் துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

மிக்சி, கிரைண்டர் போன்றவற்றை புதிதாக வாங்கியவுடன் தவிடு போட்டு அரைத்தால், அதில் உள்ள துளைகள் அடைபட்டு விடும். எனவே, தவிடுக்கு பதிலாக வெங்காயத்தை போட்டு அரைத்தால், சிறு சிறு மணல், கல், துகள் ஆகியவை வெங்காயத்துடன் ஒட்டிக் கொண்டு வந்துவிடும்.

சமைக்கும்போது, ஒரு ஸ்பூன் சிட்ரிக் அமிலத்தை விட்டு, தண்ணீர் ஊற்றி குக்கரை உபயோகித்தால் கருப்புக்கறை நீங்கி, குக்கர் புதிது போல் ஆகி விடும்.

போரிங் பவுடரையும், கோதுமை மாவையும் சம அளவு எடுத்து நீரில் கரைத்து, கொதிக்க விடுங்கள். அந்தக் கலவை பசை போல் மாறியதும் இறக்கி, ஆறிய பின், அந்தப் பசையை சிறு சிறு உருண்டைகளாக்கி வெளியிலும் காய விடுங்கள்.

பின், அந்த உருண்டைகளை சமையலறை அலமாரி மற்றும் கரப்பான் தொல்லை உள்ள இடங்களில் போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் ஓடிவிடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us