sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/கால்சியம் படிமத்தை தடுக்கும் வேப்பெண்ணெய்!

கால்சியம் படிமத்தை தடுக்கும் வேப்பெண்ணெய்!

கால்சியம் படிமத்தை தடுக்கும் வேப்பெண்ணெய்!


PUBLISHED ON : ஏப் 12, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 12, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நீண்ட நாட்களாக தீவிர சிறுநீரகக் கோளாறு உள்ளவர் களுக்கு, உயர் ரத்த அழுத்தம் இருந்தால், நோயின் வீரியத்தை அதிகரிக்கச் செய் கிறது. சிறுநீரக செயல்பாடு குறைந்தால், சிறு நீரகங்களில் வீக்கம் ஏற்பட்டு, முதுகு வலி வரும்; பொட்டாசி யத் தின் அளவு அதிகரிக்கும்.

உயர் ரத்த அழுத்தம் இருந்தால், இதய நாளங்களில் பிரச்னை ஏற்படலாம். ரத்தத்தில் கிரியாட்டினைன் அளவு அதிகரிக்கும்.

சிறுநீரகங்களின் செயல் திறன் குறைவதால், ரத்தத்தில் உள்ள தேவையற்ற தாதுக்களை வடிகட்டுவது, நிமிடத்திற்கு 60 மில்லி என்ற அளவைவிட குறைவாகவே இருக்கும். இது 15 மில்லிக்கும் குறைந்தால், சிறுநீரக செயல்பாடு, இறுதி கட்டத்தில் உள்ளது என்று புரிந்து கொள்ளலாம்.



நறுமண எண்ணெய்


இது போன்று தீவிர சிறுநீரக கோளாறுடன் இருப்பவர்களுக்கு, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த, லாங் லாங், லேவண்டர் ஆகிய நறுமண எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும் போது, நரம்பு மண்டலத்தை இது அமைதிப்படுத்துகிறது. இதனால், பதற்றம் குறைந்து, ரத்த அழுத்தம் குறைகிறது என்பது ஏற்கனவே செய்த ஆராய்ச்சியில் உறுதி ஆகியுள்ளது.

பொதுவாக கிரியாட்டினைன் அளவை இயல்பாக்க, முதுகின் பின்புறம் பற்று போடுவது, அவித்த காய்கறிகள் சாப்பிடத் தருவது, வாழை இலை குளியல் போன்றவற்றை இயற்கை மருத்துவத்தில் செய்வதுண்டு. இத்துடன், நறுமண எண்ணெய் மசாஜ் எந்த அளவிற்கு உதவியாக இருக்கும் என்ற ஆராய்ச்சியை செய்தோம். இதில் 30 நோயாளிகள் பங்கு பெற்றனர்.

லாங் லாங், லேவண்டர் எண்ணெய்யுடன் பிராங்கிளின்சென்ஸ் எண்ணெய், தலா ஒரு சொட்டு, 5 மில்லி வேப்ப எண்ணெய்யுடன் சேர்த்து, இத்துடன் நல்லெண்ணெய் கலந்து, கழுத்து பகுதியில், ஒரு நிமிடத்திற்கு 22 முறை மசாஜ் செய்தோம். இரண்டு, மூன்று நாட்களில், ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்தது; யூரியா, கிரியாட்டினைன் அளவை கட்டுக்குள் வைக்க முடிந்தது.

வேப்ப விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்யில், லிமனாய்டுகள் என்ற வேதிப் பொருள் உள்ளது. இது கிருமி நாசினியாக செயல் படுவதோடு, ரத்த நாளங்களில், கால்சியம் படிவதை தடுக்கும். மேலும், ரத்தக் குழாயை விரிவடையச் செய்து, அழுத்தத்தைக் குறைக்கிறது.

இத்துடன் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் கார்ட்டிசாலைக் குறைக்கிறது.

டாக்டர் தீபா யோகேந்திரன், இயற்கை மருத்துவர், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை, சென்னை. 044 26222682sakshaayaan@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us