sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

புதுப்புது அர்த்தங்கள்: நண்பனோடு சண்டையிட்டால் சந்தோஷமே!

/

புதுப்புது அர்த்தங்கள்: நண்பனோடு சண்டையிட்டால் சந்தோஷமே!

புதுப்புது அர்த்தங்கள்: நண்பனோடு சண்டையிட்டால் சந்தோஷமே!

புதுப்புது அர்த்தங்கள்: நண்பனோடு சண்டையிட்டால் சந்தோஷமே!


PUBLISHED ON : டிச 31, 2014

Google News

PUBLISHED ON : டிச 31, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நண்பன் என்பவன் யார்? தனக்காக எதையும் செய்பவன்; அதாவது, பிரதிபலன் பாராமல், எதையும் செய்பவன்தான் நண்பன். 'நண்பனுக்காக புகைப்பிடித்தேன்; நண்பனுக்காக நியாயம், தர்மத்தை மீறினேன்' என்பதெல்லாம் இதனால்தான்!

பள்ளியின் ஆசிரியரை சந்தித்தால், 'நண்பர்களால் இவன் படிக்கவில்லை' என்று கூறுவார். காவல்துறை அதிகாரியோ, 'நண்பர்களின் தூண்டுதலினால் இத்தவறை செய்தான்' என்பார். பெற்றோரைக் கேட்டால், 'நண்பர்களால் தான் இவன் கெட்டு குட்டிச்சுவராகிப்போனான்' என்பர். இவற்றையெல்லாம் உற்றுப்பார்க்கும் போது, 'நட்பு அவ்வளவு மோசமானதா? நண்பன் அவ்வளவு கேவலமானவனா?' என்ற கேள்விகள் எழத்தான் செய்யும்! இந்த இடத்தில்தான், நாம் சிந்திக்க வேண்டும்.

நம் நலனில் அக்கறை கொள்பவனும், வளர்ச்சியில் ஆர்வம் காண்பிப்பவனும் தான் நண்பன் ஆவான்! நண்பன் பாதை மாறும்போது, அவனை நல்வழி மற்றும் நேர்வழியில் செலுத்துபவன் தான் நண்பனாவான்! கண்மூடித்தனமாக ஒத்துழைப்பு தருவதற்கு பெயர் நட்பல்ல. ஆரோக்கிய வழிகளில் இலக்கை அடைந்து, சாதனை படைப்பதற்கு துணை நிற்பதே நட்பு!

எனவே, தகுந்த காரணங்களுக்காக நண்பனோடு சண்டையிடுங்கள்; சண்டை போட்டு சந்தோஷப்படுங்கள்; இதனால், அச்சமயத்தில் நட்பை இழந்தாலும் தவறில்லை! ஆனால், நண்பனை மட்டும் இழந்து விடக் கூடாது. அதில் கவனமாய் இருங்கள்!

-மா. திருநாவுக்கரசு, மனநல மருத்துவர்






      Dinamalar
      Follow us