தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பாத்திரத்தில் ஒட்டாத ஆம்லெட், பான் கேக்!

பாத்திரத்தில் ஒட்டாத ஆம்லெட், பான் கேக்!

பாத்திரத்தில் ஒட்டாத ஆம்லெட், பான் கேக்!


PUBLISHED ON : பிப் 12, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 12, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த, 100 ஆண்டுகளுக்குள் கண்டு பிடிக்கப்பட்ட வேதிப் பொருள், 'டெப்லான்!' எண்ணெய் பசை ஒட்டாத சமையல் பாத்திரமாக நம் சமையலறைக்குள் 'நான் - ஸ்டிக்' வடிவில் வந்த முதல் கெமிக்கல் இது தான்.

டெப்லான் பூசப்பட்ட நான் - ஸ்டிக் பாத்திரங்கள், எந்த அளவு உடல் நலத்திற்கு தீங்கு என்பதை அறியாமலேயே, பாத்திரத்தில் ஒட்டாத ஆம்லெட், பான் கேக், பொரியல், அவியல் என்று சமைத்து சாப்பிடுகிறோம்.

டெப்லான் கண்டுபிடிக்கப்பட்ட 1938ல் அது பற்றி தெரிந்ததை விடவும், தற்போது கூடுதல் தகவல்கள் தெரிய வந்துள்ளன. 'பாலி டெட்ரா புளுரோ எத்திலின்' என்ற பல வேதிப் பொருட்களின் கலவை இது; இது தான் ஒட்டாத தன்மையை தருகிறது.

இதை அதிகமாக பயன்படுத்தும் போது கேன்சர், உடல் பருமன், எலும்புகளின் வளர்ச்சி, மூளை வளர்ச்சியில் பிரச்னை, நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடுகளில் சீரற்ற தன்மையை ஏற்படுத்துவது என்று பல அபாயகரமான விளைவுகளைத் தருகிறது.

இதே வேதிப்பொருள், காற்றில், கடல் உணவுகளில், சிதம்பரம், டில்லி, கோல்கட்டா, சென்னையில் எடுக்கப்பட்ட தாய்ப்பால் மாதிரிகளில் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தொடர்ந்து நான் - ஸ்டிக் பாத்திரங்களில் சமைத்தால், குழந்தையின்மை, குழந்தைகளின் வளர்ச்சியில் பிரச்னை, தடுப்பூசியை போட்ட பின்னும் எதிர்ப்பணுக்கள் உருவாவதில் தாமதம் என்று பாதிப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இது தவிர, நாம் அன்றாடம் பயன்படுத்தும் மழை ஜாக்கெட், ஷாம்பு, நெயில் பாலிஷ், கண்களுக்கான மேக் அப் சாதனங்கள, தரை விரிப்புகள் என்று அனைத்திலும் இந்த பி.டி.எப்.இ., உள்ளது. நகங்களில் பூசிய பாலிசில் நீர் ஒட்டாது. தொடர்ந்து விரல் நகங்களில் இருப்பது ஆபத்து. பதிலாக, மருதாணி போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம்.

அமெரிக்கர்களின் ரத்த மாதிரி ஒவ்வொன்றிலும் இது இருப்பது கூடுதல் தகவல். சிதைந்த நான் - ஸ்டிக்கில் இருந்து 20 லட்சம் 'நேனோ கெமிக்கல்' வெளிப்படுகிறது. தண்ணீர் ஒட்டாத, எண்ணெய் ஒட்டாத பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.

- யுனைடெட் ஸ்டேட்ஸ் என்விரான்மென்டல் புரடக் ஷன் ஏஜென்சி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us