தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/குழந்தை வளர்ச்சிக்கு சத்துணவு முக்கியம்

குழந்தை வளர்ச்சிக்கு சத்துணவு முக்கியம்

குழந்தை வளர்ச்சிக்கு சத்துணவு முக்கியம்


PUBLISHED ON : மார் 13, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 13, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குழந்தைகளுக்கு, சத்துள்ள உணவுப்பொருட்களை சாப்பிட கொடுப்பது அவசியம். ஊட்டச்சத்துகள் அனைத்தும் கிடைக்கும், உணவுகளை கொடுக்க வேண்டும். உணவில் புரதம், கொழுப்பு, மாவுப் பொருள் வைட்டமின்கள், தாது உப்புகள் ஆகிய ஐந்து சத்துகள் இருக்க வேண்டும். இவை குறைந்தால், பல ஊட்டச்சத்து பற்றாக்குறை நோய்களினாலும், தொற்று நோய்களினாலும் பாதிக்கப்படுவர்.

பால், முட்டை, இறைச்சி, பருப்பு வகைகள், பட்டாணி போன்ற உணவுப் பொருட்களில், உடல் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான புரதம் அதிகமாக உள்ளது. எனவே, குழந்தையின் உணவில் இவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். பால், வெண்ணெய், நெய், இறைச்சி, சமையல் எண்ணெய் போன்றவற்றில், உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமான கொழுப்பு அதிகமாக உள்ளது. ஒரு வயதுக்கு மேற்பட்ட, குழந்தையின் உணவில் நெய், வெண்ணெய், சமையல் எண்ணெய் போன்றவற்றை, அளவோடு சேர்த்துக் கொள்ளலாம்.

மாவுப் பொருட்கள், உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகின்றன. அரிசி, கிழங்குகள், தானியங்கள் ஆகியவற்றில் மாவுப் பொருட்கள் அதிகமாக உள்ளன. அரிசி சோறு, கோதுமை மற்றும் வேறு தானியங்களில் செய்த பண்டங்கள், உருளைக் கிழங்கு போன்றவற்றை குழந்தையின் உணவில் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம்.

புரதச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை, அதிகமாக சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதே சமயம், மாவுப் பொருட்கள், கொழுப்பு ஆகியவையும், குழந்தைகளுக்கு போதுமான அளவில் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு போன்ற சில தாதுப் பொருட்களும், குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தேவை. கால்சியமும், பாஸ்பரசும் குழந்தையின் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு அவசியம். இரும்பு, செம்பு ரத்த விருத்திக்கு தேவை. பால்,

அவரைக்காய் போன்றவற்றில், கால்சியம் அதிகமாக இருக்கிறது. உப்பு, பால், கோழி, இறைச்சி போன்றவற்றில் பாஸ்பரஸ் அதிகம். கீரை, அவரைக்காய், பட்டாணியில்,இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது.

குழந்தைகளின் தினசரி உணவில், மீன் எண்ணெய், பழரசம், பருப்பு, நெய், கீரை, காய்கறிகள், அரிசியுடன் கோதுமை, கேழ்வரகை போதிய அளவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆரஞ்சு, தக்காளி, திராட்சை, வாழைப்பழம் போன்ற பழங்களில், ஏதாவது ஒன்றை தினமும் கொடுக்கலாம்.

தோல், தொண்டை, மூச்சுக்குழல், கண் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க, வைட்டமின் ஏ உதவுகிறது. இந்த வைட்டமின் பற்றாக்குறையினால் சளித் தொல்லைகள் ஏற்படும். மாலைக்கண் நோய் ஏற்படும். இந்த வைட்டமின் பால், தயிர், வெண்ணெய், மீன் எண்ணெய், கீரை, பழங்கள், காரட் போன்றவற்றில் அதிகமாக உள்ளது. 10 வயது வரை, குழந்தைக்கு தினமும் ஒரு வேளை இரண்டு தேக்கரண்டி மீன் எண்ணெய் கொடுப்பது நல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us