PUBLISHED ON : அக் 14, 2012

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கழுத்து, தாடை வலியா? எம். அபுபக்கர், கீழக்கரை
இரண்டு ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. ஒரு மாதமாக, கழுத்திலும், தாடையிலும் வலி ஏற்படுகிறது...சர்க்கரை நோயாளிகள் நடக்கும்போது, நடுநெஞ்சு, இடது நெஞ்சு, வலது நெஞ்சு, தோள்பட்டை, கை, முதுகு, வயிற்றின் மேல்பகுதி, கழுத்து, தாடையில் வலி ஏற்பட்டால், அது இருதய நோய்க்கான அறிகுறி தான். நீங்கள் உடனடியாக, இருதய நோய் நிபுணரை சந்தித்து, பரிசோதனை செய்ய வேண்டும். ஆஞ்சியோகிராம் செய்து பார்ப்பதும் நல்லது.