sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/நெஞ்செரிச்சலுக்கு உணவில் இருக்கு தீர்வு

நெஞ்செரிச்சலுக்கு உணவில் இருக்கு தீர்வு

நெஞ்செரிச்சலுக்கு உணவில் இருக்கு தீர்வு


PUBLISHED ON : ஜூலை 26, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 26, 2015


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெஞ்செரிச்சல் உணவுப் பழக்கவழக்கங்களால் ஏற்படுகிறது. ஏனெனில் சரியாக உண்ணாமல் இருப்பதால், இரைப்பையில் உணவை செரிக்க உதவும் அமிலமானது தேங்கி, வயிற்றில் எரிச்சலை உண்டாக்கும். மேலும் அவை நீடித்தால், அந்த அமிலமானது உணவுக்குழல் வழியாக மேலே ஏறி, நெஞ்சில் எரிச்சலை உண்டாக்குகின்றன.

இத்தகைய நெஞ்செரிச்சலை, ஒருசில உணவுகள் மூலமாக சரிசெய்ய முடியும். முக்கியமாக உணவுகளை சரியாக சாப்பிடுவதோடு, சரியான நேரத்தில் சாப்பிடுவது, குறைந்தது, 8 மணிநேரம் தூங்குவது மற்றும் தினமும் உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.

ஒருவேளை ஏற்கனவே நெஞ்செரிச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால், நீண்ட நேரம் எதுவும் சாப்பிடாமல் உட்காரும் நேரத்தில், அவ்வப்போது ஏதேனும் ஒருசில உணவுகளையும் சாப்பிட வேண்டும். ஒருவேளை உணவுகளால் சரிசெய்ய முடியாவிட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். குறிப்பாக இந்த நெஞ்செரிச்சலுக்கு பழங்கள், காய்கறிகள் போன்றவை இருக்கின்றன. அவற்றை சரியாக சாப்பிட்டு வந்தால், அந்த பிரச்னையிலிருந்து உடனடியாக விடுபட முடியும். கால்சியம் அதிகம் உள்ள உணவுகள் கூட, நெஞ்செரிச்சலை சரிசெய்யும்.

ஆப்பிள்: ஆப்பிளில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. எனவே வயிற்றில் அல்லது நெஞ்சில் எரிச்சல் ஏற்படும் போது, ஆப்பிளை சாப்பிட்டால், எரிச்சலைத் தடுக்கலாம்.

தண்ணீர்: தினமும் போதுமான அளவில் தண்ணீரைக் குடிக்க வேண்டும். இதனால் எரிச்சலை ஏற்படுத்தும் அமிலமானது கரைந்து வெளியேறிவிடும். அதுமட்டுமின்றி, தண்ணீர் குடித்தால், உடலில் உள்ள செயல்பாடுகள் அனைத்தும் சீராக இயங்கும்.

கற்றாழை: ஹிலிகோபாக்டர் பைலோரியா என்னும் பாக்டீரியம், எரிச்சலை ஏற்படுத்தும் அமிலத்தை அதிகம் சுரக்க வைக்கிறது. எனவே கற்றாழை ஜூஸை குடித்து வந்தால், அந்த பாக்டீரியா அழிக்கப்பட்டு, நெஞ்செரிச்சல் தடைபடும்.

கடல் உணவுகள்: கடல் உணவுகளில் டாரின் (taurine) சத்து அதிகமாக உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், எரிச்சலை உண்டாக்கும் அமிலத்தை டாரின் குறைக்கும். அதுமட்டுமல்லாமல், இது கண்களுக்கும் சிறந்தது.

ஆப்பிள் சீடர் வினிகர்: இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை, வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், நெஞ்செரிச்சலை தடுக்கலாம்.

வாழைப்பழம்: வாழைப்பழத்தில் ஆன்டாசிட்கள் உள்ளன. எனவே தினமும் வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்லது.

பால்: பாலில் கால்சியம் அதிகம் உள்ளது. கால்சியம் உடலில் அதிகம் இருந்தால், அது எரிச்சலை உண்டாக்கும் அமிலம் அதிகம் சுரப்பதை தடுக்கும்.

அதிமதுரம் (Licorice): இந்த உணவுப் பொருள் எரிச்சலை உண்டாக்கும் அமிலத்தின் உற்பத்தியை குறைப்பதில் சிறந்தது. அதுமட்டுமன்றி இதில் உள்ள நார்ச்சத்து, உடலில் கொலஸ்ட்ரால் தங்குவதைத் தடுக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us