தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/கணையத்தில் கல் உருவாக்கும் மரவள்ளி கிழங்கு

கணையத்தில் கல் உருவாக்கும் மரவள்ளி கிழங்கு

கணையத்தில் கல் உருவாக்கும் மரவள்ளி கிழங்கு


PUBLISHED ON : நவ 28, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 28, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிறுநீரகக் கல், பித்தப்பை கல் போன்று, கணையத்தில் உருவாகும் கல் பற்றிய விழிப்புணர்வு இல்லை. போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, மது பழக்கம் இருந்தால் கணையம் வீங்கி, அழற்சி ஏற்பட்டு, கல் உருவாகலாம்.

அசோக மர இலை மாதிரி நீளமாக இருக்கும் கணையத்தின் நடுவில், இலையின் காம்பு போன்று கணைய நீர் சுரப்பி உள்ளது. கணையத்தில் கல் உருவாகி, பெரிய அடைப்புகளை ஏற்படுத்தும். கணைய நீருடன் பித்த நீரும் சேர்ந்தே சிறுகுடலுக்கு செல்லும். எனவே, பித்த பையில் உருவான கல், கணைத்தில் அடைப்பதாலும், கணையத்தில் கல் உருவாகலாம். கல் இருந்தால், இடுப்பு, முதுகு தண்டில் வலி, வயிற்று வலி அவ்வப்போது விட்டு விட்டு வரும். நாள்பட்ட வலியாக இருக்கும்.

குழந்தை முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினருக்கும் கணைய கல் வரலாம். கல் உருவானால், கணையம் சுருங்கி, கணையத்தின் செயல்திறன் குறைந்து விடும். இதனால் செரிமானத்திற்கு தேவையான என்சைம்கள் சுரப்பது குறையும். பலவிதமான செரிமான கோளாறுகள் வரலாம். இன்சுலினை சுரக்கும் பீட்டா செல்கள் திறம்படச் செயல்படாமல், இன்சுலின் சுரப்பது குறைந்து, இன்சுலின் சார்பு சர்க்கரை கோளாறான டைப் - 1 வகை பாதிப்பு வரலாம். சிலருக்கு இன்சுலின் போதுமான அளவு சுரந்து, திறம்படச் செயல்படாமல், ரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்து, டைப் - 2 சர்க்கரை கோளாறும் வரலாம். கல் அளவுக்கு அதிகமாக பெரிதானால், பித்த நீர் வரும் பாதையை அடைத்து, மஞ்சள் காமாலை வரலாம். இவை அனைத்தையும் விட கவனிக்க வேண்டியது, உள்பகுதியில் அழற்சியை ஏற்படுத்தி, கேன்சர் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

ஆரம்பத்தில் கண்டுபிடித்து, கல்லை அகற்றி விட்டால், பீட்டா செல்கள் உட்பட பல செல்களின் கூட்டான ஐ - லெட் செல்களை செயலிழக்காமல் செய்து, சர்க்கரை கோளாறை சரி செய்யலாம். நீண்ட காலமாக கல்லை கவனிக்காமல் விட்டால், ஐ - லெட் செல்கள் அழிந்து விடும். இந்நிலையில், கல்லை அகற்றினாலும் சர்க்கரை கோளாறை சரி செய்ய முடியாது. சர்க்கரை கோளாறு என்று தெரிந்தவுடன், அல்ட்ரா சவுண்டு செய்து, கணையத்தில் கல் இருக்கிறதா என்பதை பரிசோதிப்பது அவசியம்.



மரவள்ளி கிழங்கு


எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர்களுக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கும் கணையத்தில் கல் உருவாகிறது. நம் நாட்டில் நெல்லை, மதுரை போன்ற தென் மாநிலங்கள், கேரளாவிலும் இந்தவித பாதிப்பு அதிகம் உள்ளது. இதற்கான காரணத்தை ஆராய்ந்ததில், வருடத்தில் ஒன்பது மாதங்கள் வெயில் அடிக்கும் வெப்ப மண்டல இடங்களில் வசிப்பவர்கள், மரவள்ளி கிழங்கின் பயன்பாடு அதிகமிருக்கும் இடங்களிலும் கணையத்தில் கல் உருவாவது பொதுவான விஷயமாக உள்ளது.

சிகிச்சை

அல்ட்ரா சவுண்டு பரிசோதனையில் கல் இருப்பதை உறுதி செய்யலாம். எம்.ஆர்.ஐ., -- சி.டி., ஸ்கேன் செய்தால், கல்லின் அளவு, கணைய நீர் சுரப்பியின் வீக்கம் என்று பாதிப்பு முழுமையாக தெரியலாம். அறிகுறிகள் மிதமாக இருக்கும் ஆரம்ப நிலையில், கணையம் சுரக்கும் என்சைம்களை ஊசி வழியாக, தனி நபரின் தேவையை பொருத்து சில மாதங்கள், ஆண்டுகள், சிலருக்கு வாழ்நாள் முழுதும் தர வேண்டியிருக்கும். இதனால், செரிமான கோளாறுகள் சீராகும். அதன்பின், என்சைம்கள் தருவதை நிறுத்தி விடலாம். அடுத்த நிலையில், கல் சற்று பெரிதாக கணைய சுரப்பியை அடைத்து இருந்தால், கணைய நீர் வெளியேறுவதில் சிக்கல் வரும். இதற்கு எண்டோஸ்கோபி சிகிச்சை வாயிலாக, சுருங்கிய இடத்தில் ஸ்டென்ட் வைத்து, கல்லையும் சிதைத்து வெளியேற்றலாம். மூன்றாவது நிலையில் அளவுக்கு அதிகமாக கல் பெரியதாக இருந்தால், அறுவை சிகிச்சை ஒன்று தான் தீர்வு.

டாக்டர் பி.செந்தில்நாதன், செரிமான மண்டல அறுவை சிகிச்சை நிபுணர், சென்னை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us