PUBLISHED ON : ஆக 30, 2015

இன்றைய சூழலில், பழங்களின் மூலம் கிடைக்கும் பானங்களை காட்டிலும், உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய, பானங்களையே மக்கள் நாடி செல்கின்றனர். இயற்கையாக கிடைக்கும் காய், கனிகளில் தயாரிக்கப்படும் பானங்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது.
ஆதலால் நோய் எதிர்ப்பு மண்டத்தை வலிமையுடனும், ஆரோக்கியத்துடனும் வைத்துக்கொள்ள ஆரோக்கியமான பழங்கள், காய்கறிகளை எடுத்துக்கொள்வதோடு குளிர்பானங்களையும் குடிக்க வேண்டும்.
எலுமிச்சை ஜூஸ்: உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, எலுமிச்சை ஜூஸ் உதவியாக இருக்கும். ஏனெனில் இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும், வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது, உடலின் அமிலத்தன்மையை நிலையாக வைத்திருக்க உதவும்.
பீட்ரூட் ஜூஸ்: பீட்ரூட்டில் பீட்டா கரோட்டீன், வைட்டமின் சி, சல்பர், கால்சியம், இரும்புச்சத்து, கரோட்டீனாய்டு, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் உள்ளது. இதனை அன்றாடம் குடித்து வந்தால், நோய்களின் தாக்கம் குறைவதோடு, மூளையின் இயக்கமும் சீராக இருக்கும். பீட்ரூட் ஜூஸ், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பையை சுத்தம் செய்ய பெரிதும் உதவியாக இருக்கும்.
கேரட் ஜூஸ்: கேரட், கண்களுக்கு மட்டுமல்ல, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு கேரட்டை அன்றாடம் பச்சையாக வோ அல்லது ஜூஸ் ஆகவோ குடிக்கலாம். இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் மட்டுமின்றி, கல்லீரலும் சீராக இயங்கும்.
