தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/சர்க்கரையை அடக்கி ஆளும் பிஸ்தா!

சர்க்கரையை அடக்கி ஆளும் பிஸ்தா!

சர்க்கரையை அடக்கி ஆளும் பிஸ்தா!


PUBLISHED ON : மே 14, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 14, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீட்டில் பொதுவாக, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு போன்ற பருப்பு வகைகளைதான் உணவில் அதிகம் சேர்த்து வருகிறோம். பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற பருப்புகளை உண்பது மிகவும் குறைவு. இதற்கு காரணம் இவற்றின் விலை அதிகம் என்பதே. ஆனால் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் பிஸ்தா பருப்பு சாப்பிடுவது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. இதன் மூலம், பல நோய் பிரச்னைகள் தீரும்.

பிஸ்தாவில், 30 வகையான வைட்டமின்கள், மினரல்கள், ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பிஸ்தா பருப்பில் வைட்டமின் பி6 உள்ளதால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தி அதிகரிக்கும். மேலும், உடல் செல்களுக்கு ஆக்சிஜன் கிடைக்கவும் செய்யும்.

வைட்டமின் பி6, நோய் எதிர்ப்புத்திறனை தருவதோடு, வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களை உற்பத்தி செய்து மண்ணீரல் மற்றும் நிணநீரை பராமரிப்பதிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள வைட்டமின் ஈ தோல் முதிர்ச்சியடைவதை தடுத்து, அழகான தோலினை தருகிறது. மேலும் வைட்டமின் ஈ புற ஊதாக்கதிர்களால் தோல் பாதிப்பாகாமல் இருக்கவும் மற்றும் தோல் புற்றுநோய் வராமல் இருக்கவும் உதவும்.

பிஸ்தாவில் சியாசாந்தின் மற்றும் லூட்டின் என்ற இரண்டு கரோட்டினாய்டுகள் உள்ளன. இந்த கரோட்டினாய்டுகள் கண்ணின் விழித்திரை பாதிக்காமல் பாதுகாத்து தெளிவான பார்வைக்கு உதவுகின்றன.

பிஸ்தா சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட எல்டிஎல் கொழுப்பை குறைப்பதோடு ஆரோக்கியம் தரக்கூடிய ஹெச்டிஎல் கொழுப்பை அதிகரிக்கச்செய்யும். இதயநோயால் ஏற்படும் பாதிப்பையும் குறைக்கும்.

பிஸ்தாவை தொடர்ந்து சாப்பிட்டால் டைப் 2 சர்க்கரை நோய் வராது; ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்கின்றனர், ஆய்வாளர்கள். இதில், பாஸ்பரஸ் அதிக அளவில் இருப்பதால், குளுக்கோசை அமினோ அமிலமாக சிதைக்கிறது. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு பிஸ்தா ஒரு நல்ல பயனுள்ள உணவாகும்.

புற்று நோய், இதய நோய், சர்க்கரை நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பிஸ்தா பருப்பு நல்ல பலனைத்தரும். தினமும் பிஸ்தா சாப்பிட்டு வந்தால் எந்த வகையான புற்று நோயும் வராமல் தடுக்கலாம் என்று அமெரிக்க புற்றுநோய் ஆய்வு சங்கம் அறிவித்துள்ளது.

ரொட்டியுடன் கையளவு பிஸ்தா உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு கணிசமாக குறையும். மேலும், பசியைத் தூண்டி விடுகிறது என்றும் ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.

பிஸ்தாவில் குறைந்த அளவு கலோரி, குறைந்த அளவு கொழுப்புடன் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால் உடல் எடை அதிகம் கொண்டவர்கள், பிற உணவை குறைத்து அதற்கு பதிலாக பிஸ்தாவை உட்கொள்ளலாம். ஒன்று அல்லது இரண்டு கை நிறைய தினமும் பிஸ்தா சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவு குறையும் என்கிறது ஒரு ஆய்வு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us