sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

வேலைக்கு செல்லும் கர்ப்பிணிகளே உஷார்..!

/

வேலைக்கு செல்லும் கர்ப்பிணிகளே உஷார்..!

வேலைக்கு செல்லும் கர்ப்பிணிகளே உஷார்..!

வேலைக்கு செல்லும் கர்ப்பிணிகளே உஷார்..!


PUBLISHED ON : அக் 29, 2017

Google News

PUBLISHED ON : அக் 29, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்களுக்கு இணையாக, பெண்கள் இல்லாத துறைகளே இல்லை. வீட்டை கவனிப்பதோடு, அலுவலகத்திலும் உள்ள பிரச்னைகளால் சாதாரண பெண்களே மன அழுத்தத்துக்கு உள்ளாகும் போது, கர்ப்பிணி பெண்களுக்கு சொல்லவா வேண்டும்? இதிலிருந்து தற்காத்துக் கொள்ள சில ஆலோசனைகள்:

அலுவலகத்துக்கு சென்று வரும் பெண்களுக்கு, அதனால் ஏற்படும் பயணக்களைப்பு, வேலையை முடிக்க வேண்டுமே என்ற பரபரப்பால் ஏற்படும் மன அழுத்தம் என, பல்வேறு காரணங்களால், உடல் நலம் பாதிக்கப்படும். தாயைவிட, வயிற்றில் உள்ள குழந்தை அதிகப் பாதிப்புக்கு உள்ளாகலாம்.

வேலைப்பளுவால் ஏற்படும் மன அழுத்தத்தால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு போதிய ஆக்ஸிஜன், ரத்தம், சத்துக்கள் கிடைக்காமல் போகும். ஆனால், சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்க முடியும். கர்ப்பக்காலத்தில், செரிமான மண்டலம் மெதுவாகத்தான் இயங்கும். குழந்தையின் வளர்ச்சியால் வயிறும் பெரிதாகி கொண்டே போகும். ஒரே நேரத்தில் நன்றாக சாப்பிட முடியாது. எனவே, மூன்று வேளை என்பதை, சிறிது சிறிதாகப் பிரித்து, ஆறு வேளைகளாக சாப்பிடலாம்.

சரியான நேரத்தில், போதிய இடைவெளியில் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வீட்டை விட்டுக் கிளம்பும்போது ஆப்பிள், கொய்யா, வாழைப்பழம், பேரிக்காய் போன்ற சத்துள்ள பழங்களை நறுக்காமல், எடுத்துச்செல்ல வேண்டும். பழங்களைக் கடித்து சாப்பிடுவது நல்லது. முடியாதபட்சத்தில் சாறாக பருகலாம். எப்போதும் காய்ச்சி ஆறவைத்த நீரை, உடன் எடுத்து செல்ல வேண்டும். நீரை அவ்வப்போது குடித்து வர வேண்டும். உடலுக்கு ஆற்றல் தரக்கூடிய உலர் பழங்களை கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதிக வேலை சுமையின் போது, வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.

இரவில் ஆவியில் வேகவைத்த அல்லது எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளை சாப்பிடுவது நல்லது. நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகள் இருந்தால், வறுத்த, பொரித்த, அதிகம் காரம், எண்ணெய் உணவுகளை சாப்பிடக் கூடாது. அலுவலகத்தை சுற்றி நடைப்பயிற்சி செய்யுங்கள். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால், காலில் ரத்தம் தங்குதல், வெரிகோசிஸ் வெய்ன், ரத்தம் கட்டிப்போதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

இதற்கான வாய்ப்பை நடைப்பயிற்சி தடுக்கிறது.

அலுவலகம் முடிந்து வீடு வந்ததும், நல்ல வெளிச்சமான பகுதியில், காலாற சிறிது நேரம் நடக்கலாம்.

அலுவலகத்தில் போதிய இடைவெளியில் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் ஓய்வாக அமர்ந்து மனதை அமைதிப்படுத்திக்கொள்ள

வேண்டும். இது, வேலையால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தைப் போக்க உதவும். வேலைக்கு செல்லும்போது, பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம்,

இறுக்கத்தைத் தவிர்க்கலாம்.

பஸ்சில் அலுவலகம் செல்லும்போது குமட்டல், வாந்தி, சோர்வு ஏற்படலாம். தானாகவே மருந்துகளை வாங்கிச் சாப்பிடக் கூடாது. பஸ், அலுவலகம் என எந்த இடத்திலும், 15 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து நிற்பது நல்லதல்ல. கால் நரம்புகள் சுருண்டுகொள்ளும். கெண்டைக்கால் வலி வரலாம்.

சிறுநீரை அடக்கி வைப்பதால், நீர்க்கடுப்பு, கல் அடைப்பு வரலாம். இரு சக்கரத்தில் பயணிக்கும் போது, மேடுபள்ளம் பார்த்துச் செல்ல வேண்டும். இதனால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு அதிர்வு ஏற்படுவதை தவிர்க்கலாம். ஹீல்ஸ் அணியவே கூடாது. தடுக்கி விழ நேரலாம். இதுவும் குழந்தைக்கு அதிர்வை ஏற்படுத்தும். எனவே அதிக உயரம் இல்லாத செருப்பை அணிவது நல்லது.






      Dinamalar
      Follow us