தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கர்ப்பிணிகள் கையில் சுகப்பிரசவம்

கர்ப்பிணிகள் கையில் சுகப்பிரசவம்

கர்ப்பிணிகள் கையில் சுகப்பிரசவம்


PUBLISHED ON : நவ 22, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 22, 2015


Follow on Google
அ நிறம் | அளவு

கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆவதற்கு சில ஆசனப் பயிற்சிகள் உண்டு. அவற்றை ஏழாவது மாதத்தில் இருந்து செய்யலாம். ஆசனப் பயிற்சி செய்துதான் சுகப்பிரசவம் ஆக வேண்டியதில்லை. வீட்டு வேலைகளை செய்து வந்தாலே, எளிதாக சுகப்பிரசவம் ஆகும். கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதத்தில் மல்லாந்து படுப்பதோ, மல்லாந்தபடி படுத்திருந்து, அப்படியே எழுவதோ மிகவும் தவறு.

முதல் மூன்று மாதங்களுக்கு ஒருக்களித்து படுத்தபடி இருப்பது, கருவின் வளர்ச்சிக்கு உதவும். அதேபோன்று, ஒருக்களித்தபடியே கையை ஊன்றித்தான் எழுந்திருக்க வேண்டும். ஒருக்களித்தபடி படுக்கும் போது வயிறு தளர்வான நிலையில் இருக்கும். ஆனால் மல்லாந்து

படுத்தால் வயிறு இழுத்த நிலையில் இருக்கும். அப்படி இருக்கும் போது கரு குழந்தையாக உருவாவதில் சிக்கல் ஏற்படும்.

மல்லாந்து படுத்தால் குழந்தைக்கு, குடல் சுற்றிக் கொள்ளும் ஆபத்து ஏற்படும். அதே போல, ஒரு பக்கம் ஒருக்களித்து படுத்திருக்கும் போது அடுத்த பக்கத்திற்கு அப்படியே திரும்பக் கூடாது. எழுந்து உட்கார்ந்து பிறகுதான் அடுத்த பக்கம் ஒருக்களித்து படுக்க வேண்டும். இது குழந்தை சுகப்பிரசவம் ஆக உதவும்.

இதனால் குழந்தை தலை திரும்புவதில் பிரச்னை ஏற்படுகிறது. தலை திரும்பாமல் இருந்தால் சிசேரியன் மூலமாகத்தான் பிரசவமாகும். மேலும், எல்லோருமே குனிந்து நிமிர்ந்து வேலை செய்தாலே சுகப்பிரசவமாகும். வீட்டு வேலைகளை தாங்களாகவே செய்து கொண்டால்,

எல்லோருக்கும் சுகப்பிரசவமாகும் வாய்ப்பு உள்ளது.

கர்ப்பிணிகள் ஏற்கனவே யோகாசனம் செய்து வந்து கொண்டிருந்தாலும், முதல் மூன்று மாதங்களுக்கு செய்யக் கூடாது. அதன் பிறகும் எளிதான பயிற்சிகளை செய்யலாம். வீட்டை பெருக்குதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளை செய்யும் போது வயிறு சுருங்கி விரியும் தன்மையை பெறுகிறது. தற்போது சில பெண்களுக்கு சுகப்பிரசவம் என்றால் பயம் ஏற்படுகிறது. முதலில் அந்த பயத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us