sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/கொழுப்பை குறைக்கும் கத்தரிக்காய்!

கொழுப்பை குறைக்கும் கத்தரிக்காய்!

கொழுப்பை குறைக்கும் கத்தரிக்காய்!


PUBLISHED ON : ஆக 13, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 13, 2017


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆண்டு முழுவதும் கிடைக்கும் காய்கறிகளில் கத்தரிக்காயும் ஒன்று. வாத நோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பான குரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் திறன் கொண்டது கத்தரிக்காய். குறிப்பாக நாட்டு கத்தரிக்காய் நல்ல மருத்துவ குணம் உடைய காயாகும். அதை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கொழுப்புச் சத்தைக் குறைக்கும்: கத்தரிக்காயில் இருக்கும் நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து, ரத்தத்தில் சேரும் கொழுப்புச் சத்தைக் குறைக்க உதவும் ஓர் உன்னதமான மருந்தாகும். இதில் இருக்கும் நார்ச்சத்து, பசியை அடக்கி வைப்பதால், உடல் எடை குறைவதற்கு உதவுகிறது.

புத்துணர்வை தரும்: கத்தரிக்காயின் தோலில் உள்ள ஆன்த்தோ சயனின் என்னும் வேதிப்பொருள் உடலின் சோர்வைப்போக்கிப் புத்துணர்வைத் தரக்கூடியது, அது மட்டுமின்றி ஆன்தோ சயனின், புற்றுநோய் செல்களுக்கு எதிராகச் செயல்பட்டு, மேலும் பரவாமல் தடுக்கிறது.

சுவாசப் பிரச்னைகள்: கத்திரிக்காய் இலைகள் ஆஸ்துமா, மூச்சுக் குழல் நோய்கள் போன்ற சுவாசக் கோளாறுகளை சரி செய்ய உதவும். கத்தரிக்காயில்

பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு மென்மையும், பலமும் தரவல்லது. கத்தரிக்காய் நார்ச்சத்து மிகுந்து உள்ளதால் மலச்சிக்கலைப் போக்கவல்லது; அது மட்டுமின்றி சர்க்கரை நோயையும் தடுக்க வல்லது.

நல்ல தூக்கத்தை உண்டாக்கும்: கத்தரிக்காயை வேக வைத்து அத்துடன் போதிய தேன் சேர்த்து மாலை நேரத்தில் சாப்பிட்டால் நல்ல தூக்கத்தை உண்டாக்கும். தூக்கமின்மை பிரச்னையால் பாதிக்கப்படுவோருக்கு, நல்ல தீர்வை தரும்.

இதய பாதுகாப்பு: கத்தரிக்காயில் அடங்கியுள்ள நாசுமின் என்னும் வேதிப் பொருள் ரத்தத்தில் சேர்ந்துள்ள அதிகப்படியான இரும்புச் சத்தைக் குறைத்து வெளியேற்ற உதவுகிறது. இதனால், மாரடைப்பு தவிர்க்கப்படுகிறது. இளமை கத்தரிக்காயில் பொதிந்திருக்கும் ஆன்த்தோ சயனின் வேதிப்பொருள் வயது முதிர்வை தடுத்து இளமைத் தோற்றத்துக்கு வகை செய்கிறது.

புற்றுநோயை தடுக்கும்: கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் தோலில் ஏற்படும் புற்றுநோயைத் தடுத்து தோல் ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றன. கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது. முற்றிய காய்களைச் சாப்பிட்டால்தான் உடம்பில் அரிப்பு ஏற்படும். குறிப்பாக, வீட்டிலே வளர்த்துப் பிஞ்சாகப் பறித்துச் சாப்பிட வேண்டிய காய்களுள் இதுவும் ஒன்றாகும்.

தக்காளியைப் போலவே புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் முதலியன கத்தரிக்காயில் உள்ளன. ஆனால் வைட்டமின் 'ஏ'யும், 'சி'யும் குறைவாகவே உள்ளன. இவற்றை ஈடுசெய்யும் வகையில் வைட்டமின் பி தக்க அளவில் உள்ளது. சாப்பிடும் மற்ற உணவுகள் உடனடியாகச் சிதைந்து சத்தாக மாற, கத்தரிக்காயில் உள்ள வைட்டமின் 'பி' பயன்படுகிறது.

வாயு நோய் தடுத்து, பசியின்மை போக்குகிறது. உடல் வலு குறைவது தடுக்கப்படுகிறது. மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது முதலியவையும் தடுக்கப்படுகிறது. முற்றிய காய்கள் உடல் வளர்ச்சிக்குப் பயன்படும். காரணம், இவற்றில் வைட்டமின் ஏ அதிக அளவில் இருப்பதால் கண்பார்வைத் திறனும் அதிகரிக்கும். அரிப்பு அலர்ஜி இருப்பவர்கள் கத்தரிக்காயை உணவில் சேர்த்து கொள்வது இல்øல என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us