sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/கீரைகளின் அரசி

கீரைகளின் அரசி

கீரைகளின் அரசி


PUBLISHED ON : ஆக 13, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 13, 2017


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடியவை கீரைகள். குறிப்பாக, கரிசலாங்கண்ணி, கீரைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும் ஓர் அரிய வகையான கீரை. இயற்கை வைத்திய முறைகளில், இதன் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. கரிசலாங்கண்ணி, மருந்துக்குத்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

ரத்தத்தை சுத்தம் செய்கிறது. கண் பார்வையைத் தெளிவுபடுத்துகிறது. தசையை விரைக்க செய்யும் உபாதையை போக்க பயன்படுத்தப்படும் மருந்தில், இது முக்கியமாக சேர்க்கப்படுகிறது.

உடலுக்கு உரமூட்டுகிறது. மண்ணீரலில் ஏற்படும் வீக்கத்தை குணப்படுத்துகிறது. தோல் வியாதிகளுக்கும் நிவாரணம் தருகிறது. கீரையை உண்பதாலும், இதன் சாறை, தலையில் தேய்ப்பதாலும், முடிக்கு கருமை வண்ணம் கொடுக்கிறது.

தலைமுடி கருப்பாக...! கரிசலாங்கண்ணி சாறை, சிறிதளவு தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால், சளி, நீர்க்கோவை போன்றவை குணமாகும். நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன் கரிசலாங்கண்ணி சாறு கலந்து காய்ச்சி தயாரிக்கப்பட்ட தைலத்தை, தலைவலி முதலியவற்றுக்கு

தேய்க்கலாம். தலையில் தேய்த்தால் தலைமுடி கருமையாகும்.

எடை, உடல் பருமன், தொந்தியை கரைக்க விரும்புவோர், இக்கீரையை, தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாண்டு, சோகை, காமாலை

முதலியவற்றைக் கட்டுப்படுத்தும். கல்லீரல், மண்ணீரலைப் பலப்படுத்தும். பித்த நீர்ப்பெருக்கியாகவும், மலமிளக்கியாகவும் செயல்படும். தோல் நோய்களைக் கட்டுப்படுத்தும். இலைகளே முக்கியமாக மருத்துவத்தில் பயன்படுகின்றன.

மலச்சிக்கல் தீரும்: தொடர் இருமல் இருந்தால், இலைச்சாறு, அரை லிட்டர், நல்லெண்ணெய், சிறிதளவு கலந்து காய்ச்சி, வடிகட்டி, ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை, வேளைகளில் ஒருவாரம் வரை சாப்பிட்டு வர வேண்டும். இலையை, பருப்பு சேர்த்துக் கடைந்து, நெய் சேர்த்து, சாதத்துடன் பிசைந்து உட்கொள்ள, மலச்சிக்கல் தீரும்.

மஞ்சள் கரிசலாங்கண்ணியின் இலைகளை எடுத்து, பருப்புடன் சேர்த்து வேக வைத்து சாம்பாராகவும், கூட்டுக்கறியாகவும், பொரியலாகவும், கடையலாகவும், செய்து உணவோடு சேர்த்து உண்ணலாம்; புளி சேர்க்கக் கூடாது. மிளகாய்க்கு பதில் மிளகு சேர்க்க வேண்டும்.

மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான மஞ்சள் காமாலை நோய்களுக்கும் மிக சிறந்த மருந்தாக விளங்குகிறது. கரிசலாங்கண்ணியை சுத்தம் செய்து இடித்து சாறெடுத்து, 100 மி.லி., தினமும் இரண்டு வேளை, 15 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். உப்பு நீங்கி பத்தியம் இருந்தால் மிக விரைவில் நோய் குணமாகும்.

உடலுக்கு பொலிவு: கரிசலாங்கண்ணி சூரணத்தை, நான்கு மாதங்களுக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா தொல்லை குறையும். கரிசாலை சாறை, காலையில் தினம், 30 மி.லி., சாப்பிட்டு வந்தால், சிறுநீர் எரிச்சல் குணமாகும். குழந்தைகளின் மாந்த நோய்க்கும், சோகை வீக்கத்துக்கும், கப நோய்க்கும் கரிசலாங்கண்ணிச் சாற்றை சிறிது கொடுத்து வந்தால், நிவாரணம் கிடைக்கும்.

கீரையை சுத்தம் செய்து, காய வைத்து பொடி செய்து , தினம், ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால், உடல் நல்ல நிறம் பெறும். தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில், தேவையான அளவு கரிசலாங்கண்ணி சாறு கலந்து காய்ச்சி வடிகட்டி, தலையில் தேய்த்து வர, தலைமுடி நன்றாக வளரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us