PUBLISHED ON : ஆக 14, 2011
ரத்தக் கொதிப்பால் இதயம் பாதிக்குமா? ஆர். ஸ்ரீதர், சென்னை.
சாதாரணமாக ரத்த அழுத்தம், 120/80 என்ற அளவில் இருக்க வேண்டும். இது 140/90 என்பதை மீறினால் உயர் ரத்தஅழுத்தம் அல்லது ரத்தக்கொதிப்பு உள்ளது என்று பொருள். இது பல வழிகளில், உடலின் உள்ளுறுப்புகளை பாதிக்கிறது. குறிப்பாக மூளை, சிறுநீரகம், கண்கள் மற்றும் இதயத்தை பாதிக்கிறது. இதயத்தை பொறுத்தவரை மாரடைப்பு, ஹார்ட் பெயிலியர், இதய தசைவீக்கம், வால்வில் ரத்தக்கசிவு போன்றவை முக்கியமானவை. உயர்ரத்த அழுத்தத்தை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இது அமைதியாக எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாமல் பல உறுப்புகளை கொடூரமாக பாதிக்கிறது. இதற்கு வாழ்க்கை முறை மாற்றம், தினமும் உடற்பயிற்சி, மனதை நிம்மதியாக வைத்துக் கொள்ளுதல், மருந்து மாத்திரைகளை தொடர்ந்து முறையாக எடுத்துக் கொண்டால், இக்கொடூர வியாதியை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். எனக்கு சமீபத்தில் பக்கவாதம் போன்ற பாதிப்பு ஏற்பட்டது.
பரிசோதனை செய்ததில், இச்ணூணிtடிஞீ அணூtஞுணூதூ 80 'சதவீத அடைப்பு என வந்துள்ளது. நான் என்ன செய்ய வேண்டும்?
பி. ராஜேந்திரன், திண்டுக்கல்
இதயத்தில் செல்லும் ரத்தநாளங்களில் எப்படி அடைப்பு ஏற்படுகிறதோ, அதே போல மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயான இச்ணூணிtடிஞீ அணூtஞுணூதூ லும் அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு பலூன் மற்றும் ஸ்டென்ட் சிகிச்சை மூலம் எளிதில் அடைப்பை அகற்றிவிட முடியும். இத்துடன் இதயம் நோய்க்கு, தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் மாத்திரை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
நம் இதயத்திற்கு எந்த வகை உணவு சிறந்தது? எம். ராஜராஜன், தேவகோட்டை
நமது இந்திய உணவு வகையில், காலையில் 3 இட்லிகள் அல்லது 3 தோசைகள் எடுத்துக் கொள்ளலாம். மதியம் காய்கறிகள் நிறையவும், சாதம் குறைவாகவும் எடுத்துக் கொள்ளலாம். இரவில், 3 சப்பாத்திகள் அல்லது கோதுமை தோசை எடுத்துக் கொள்ள வேண்டும். வடை, பஜ்ஜி, அப்பளம், முறுக்கு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தோசை, சப்பாத்திக்குக் கூட எண்ணெய் இன்றி தயாரிப்பது முக்கியம். உப்பின் அளவை நன்கு குறைக்கவும். எதிலும் சர்க்கரையை சேர்க்கக்கூடாது. காலை, மாலையில் ஒரு கப் காபியோ, டீயோ சர்க்கரை இன்றி சாப்பிட வேண்டும். பழவகைகள் எடுத்துக் கொள்வது நல்லது. அசைவ உணவைப் பொறுத்தவரை முட்டை வெள்ளைக்கரு, மீன் எடுத்துக் கொள்ளலாம். மட்டன், மஞ்சள் கருவை தவிர்ப்பது நல்லது. கொறிக்கும் உணவையும் (ஸ்நாக்ஸ்) அறவே தவிர்த்தாக வேண்டும்.
