sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

கேள்வி - பதில்

/

கேள்வி - பதில்

கேள்வி - பதில்

கேள்வி - பதில்


PUBLISHED ON : மே 12, 2015

Google News

PUBLISHED ON : மே 12, 2015


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 எனக்கு வயது வயது, 55; உறுத்து குடல் அழற்சி நோய் இருக்கிறது; இது எதனால் ஏற்படுகிறது?

- செங்குட்டுவன், விருத்தாச்சலம்

உணர்ச்சி மிகுதியால் வரும் ஜீரண மண்டல நோய் தான், உறுத்து குடல் அழற்சி. உடல் ரீதியிலான நோயாக இருந்தாலும், இந்நோய்க்கு அடிப்படை காரணம், மனதின் உணர்ச்சி போராட்டங்கள் தான். இதனால், அதிகளவு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் அறிகுறியாக வயிற்றுப்போக்கும், உணர்ச்சிகளை அடக்குவதன் அறிகுறியாக மலச்சிக்கலும் ஏற்படும்.

இந்த உறுத்து குடல் அழற்சி நோயின் முக்கிய அறிகுறி வயிற்றில் வலி. அடி வயிறு மற்றும் வயிற்றின் இடது, வலது பக்கங்களில் வலி ஏற்படும். மலம் கழித்ததும் சற்றே வலி குறைந்தது போல் இருக்கும். சிறந்த மனநல ஆலோசனையே, இந்நோய்க்கான மருந்து.

- ரமேஷ், குடல் நோய் நிபுணர், சென்னை.

 சிறுநீரக பாதிப்பு எனக்கு இருக்கிறது; வயது, 45. மேலும் சிறுநீரகம் பாதிக்காமல் இருக்க, என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்?

- கிருபாகரன், கள்ளக்குறிச்சி

நாற்பது வயதை கடந்தவர்கள், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், பரம்பரை ரீதியாக சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள்; சிறுநீர் கழிப்பதில் பிரச்னை உள்ளவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை, சிறுநீரகம் தொடர்பான மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து கொள்வது நல்லது. ஒவ்வொரு மனிதனின் உடலுக்கும் தினசரி, 5 கிராம் அளவு உப்பே போதுமானது. ஆனால், தென்னிந்தியாவில் தினசரி, 20 கிராம் அளவுக்கு உட்கொள்கிறோம். அதைக் குறைக்க வேண்டும்.

உப்பு நிறைந்த பொருட்களான ஊறுகாய், கருவாடு, அப்பளம், சமையல்சோடா, சிப்ஸ் மற்றும் 'ரெட்மீட்' எனப்படும் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதை குறைத்துக் கொண்டால், சிறுநீரகம் பாதிக்காது. அதுமட்டுமல்லாமல், தினசரி தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

- ரவி, சிறுநீரக மருத்துவர், சென்னை

 எனக்கு, 21 வயதாகிறது. அடிக்கடி வயிறு வலிக்கிறது. குடல் வால் இருக்கும் என்கின்றனர். குடல்வால் என்றால் என்ன? அதற்கு சிகிச்சை என்ன?

- திலீப், மாதவரம், சென்னை

சிறுகுடலும், பெருங்குடலும் சந்திக்கும் இடத்தில் உருவாகும் வால் போன்ற பகுதி தான், குடல் வால். இங்கு ஏற்படும் அழற்சியை தான், குடல் வால் அழற்சி என்று கூறுகிறோம். இது, சிறிய, சிவந்த வால் பகுதி போல இருக்கும். இது, இவர்களுக்கு தான் ஏற்படும் என்ற விதிவிலக்கு இல்லை. யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இன்றைய மருத்துவ வளர்ச்சியில், இதை மிகவும் எளிதான முறையில், நுண் துளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிடலாம்.

தொப்புளில் வலி, குடல் வால் அழற்சி (அணீஞுணஞீடிஞிடிtடிண்) ஏற்பட உள்ளது என்பதற்கான முதல் அறிகுறி. தொப்புள் பகுதியிலும், வயிற்றின் கீழ் வலதுபுறத்திலும் வலி ஏற்படும். குழந்தைகளுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும், கீழ் வயிற்று பகுதியில் வலி ஏற்படும்.

பசியின்மை, குடல் வால் அழற்சிக்கான மற்றொரு அறிகுறி. குடல் வால் அழற்சி ஏற்படும்போது, சரியாக சாப்பிட தோன்றாது. வயிறு பகுதியில் எப்போதும் சூடாகவும், உப்புசமாகவும் இருப்பது போல உணர்வுகள் ஏற்படும்.

- வெங்கடேசன், நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர், சென்னை






      Dinamalar
      Follow us