தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கேள்வி - பதில்

கேள்வி - பதில்

கேள்வி - பதில்


PUBLISHED ON : ஜூலை 08, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 08, 2015


Follow on Google
அ நிறம் | அளவு

எனக்கு வயது 60. நீரிழிவு நோய் உள்ளது. காலில் புண் ஏற்பட்டு ஆறவில்லை. பாதங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும்?

திருநாவுக்கரசு, திருவள்ளூர்.

சர்க்கரை நோய் உள்ளோர், செருப்பு அல்லது ஷூ அணியாமல், எங்கும் செல்லக்கூடாது. முக்கியமாக, வீட்டுக்குள்ளே இருந்தாலும் கூட, தனியாக காலணிகள் பயன்படுத்தி நடப்பது, பாதுகாப்பானது. ஏனெனில், சர்க்கரை நோயாளிகளுக்கு, புண் மிக விரைவாக பரவ ஆரம்பித்து விடும். கால்களில் வீக்கம், காரணமில்லாமல் காய்ச்சல் ஏற்படுவது, இடுப்பு பகுதிகளில் நெரிகட்டுதல் போன்ற அறிகுறிகள், உங்கள் கால்களில், பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை சொல்லும் எச்சரிக்கை மணி. கால்களில் நகங்களை, சதையோடு நெருக்கி வெட்ட வேண்டாம், இதனால், விரல் நகம் ஒட்டியுள்ள சதை பகுதியில், புண் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

மாலதி சுப்ரமணியன், நீரிழிவு நிபுணர்.

எனது மகளுக்கு வயது, 24. திருமணம் ஆகவில்லை. ஆனால், மார்பகங்கள் வலிக்கின்றன என்கிறாள். காரணம் என்ன?

சுபத்ரா, திருவேற்காடு, சென்னை.

உடலில் ஏற்படும் 'ஈஸ்ட்ரோஜென்' மாற்றங்களும், அதனால், ஏற்படும் விளைவுகளாலும் கூட பெண்களுக்கு, மார்பக வலி ஏற்படுகிறது. பெரும்பாலான, பெண்களுக்கு, தெரியாத ஒன்று, அவர்கள் உடுத்தும் பொருத்தமற்ற உள்ளாடைகளின் காரணமாகவும், மார்பக வலி ஏற்படும்.

சிலருக்கு, அவர்களது உடலோடு ஒப்பிடும் போது, பெரிய அளவில் மார்பகங்கள் இருக்கும். இதுவும் கூட, வலிக்கு காரணமாக இருக்கும். மார்பகத்தில், கட்டிகள் இருந்தாலும் வலிக்கும்.

சாந்தி, பொது மருத்துவர்.

எனக்கு, 2 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்; அடிக்கடி அழுகிறாள். அழும் குழந்தையை எப்படி சமாதானப்படுத்துவது?

தமிழரசி, வண்டலூர்,

நோய் அறிகுறிகள் ஏதும் இல்லாமல், குழந்தை நிறுத்தாமல் தொடர்ந்து அழுதால், அப்போது வெதுவெதுப்பான நீரில் அவர்களை குளிப்பாட்டலாம். அழும் குழந்தையை சமாதானப்படுத்த வேண்டுமானால், அவர்களின் வயிற்றை தேய்த்துவிட வேண்டும். வித்தியாசமான சத்தத்தை எழுப்பினால், அவர்கள் அழுகையை நிறுத்திவிட்டு, அந்த சத்தத்தை கவனிக்க துவங்குவர். குழந்தையின் அழுகையை, அவர்களது கை அல்லது கால்களை வித்தியாசமாக அசைத்து விடுவதன் மூலம் நிறுத்த முடியும். குழந்தைகள், எப்போதும் வித்தியாசமாக முகபாவனையை செய்தால், சிரிப்பர். ஆகவே குழந்தை அழும்போது, உங்கள் முகபாவனையை மாற்றி, மகிழ்ச்சிப்படுத்துங்கள்.

பெர்னாண்டஸ், குழந்தைகள் நல மருத்துவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us