PUBLISHED ON : ஆக 26, 2015
அ நிறம் | அளவு
பொருள்: இந்த ஆசனம் வெட்டுக்கிளியின் தோற்றத்தை ஒத்திருப்பதால், இப்பெயர் பெற்றது.
செய்முறை: விரிப்பில் கவிழ்ந்த நிலையில் படுக்கவும். இரண்டு கைகளை மூடி, தொடைக்கு அடிப்பகுதியில் உடலை ஒட்டியவாறு வைக்க வேண்டும். மெதுவாக கைகளை கீழே அழுத்தி, மூச்சை இழுத்துக் கொண்டே, கால்களை மேலே உயர்த்த வேண்டும்; கால்களை மடக்காமல் செய்ய பழக வேண்டும். சிறிது நேரத்திற்கு பின், மூச்சை வெளியே விட்டுக் கொண்டே, மெதுவாக கால்களை கீழே இறக்கவும்.
பலன்கள்:
1முதுகு தண்டு வடம் நன்கு பலம் பெறும்.
2முதுகு வலி, இடுப்பு வலி பிரச்னைக்கு நல்ல தீர்வை கொடுக்கிறது.
3 மலச்சிக்கல் பிரச்னைக்கு நல்ல தீர்வை கொடுக்கிறது.
4 சிறுநீரக பிரச்னைகள் சரியாகிறது.
5 மூல நோய்க்கு, நல்ல பலனைக் கொடுக்கிறது.
ரா.சுதாகர், திருமூலர் பிரபஞ்ச யோகா மையம், சென்னை. 97909 11053
