sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

கேள்வி - பதில்

/

கேள்வி - பதில்

கேள்வி - பதில்

கேள்வி - பதில்


PUBLISHED ON : அக் 07, 2015

Google News

PUBLISHED ON : அக் 07, 2015


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

என் மனைவிக்கு குழந்தை பிறந்து ஒரு வாரம் ஆகிறது. மருத்துவர்கள், 'செரிபரல் பால்சி' பாதிப்பு உள்ளது என்கின்றனர். அப்படி என்றால் என்ன?

தெ. திருநாவுக்கரசு, மதுரை.

குழந்தை பிறக்கும்போது, மூளைக்கு போதிய பிராணவாயு செல்லவில்லை என்றால், குழந்தை மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். அதனால், குழந்தையின் கை, கால் வளர்ச்சியும் பாதிக்கப்படும்.

இதற்கு உரிய நேரத்தில், எளிய முறையில் குறைந்த செலவில், சிகிச்சை அளிக்க முடியும். அதே நேரத்தில், காலம் கடந்து சிகிச்சை அளிக்கும்போது, செலவு அதிகரிக்கும். மேலும், பிறவிக் குறைபாடு எனக் கருதி, சிகிச்சை அளிக்கப்படாமல் விடும் நிலையில், அந்தக் குழந்தை வாழ்நாள் முழுவதும் ஊனத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்படும்.

மேற்சொன்ன பிரச்னையால், நரம்புகள் பாதிக்கப்பட்டு, போகப்போக குழந்தையின் கால் தசை நார் இறுகி, சரியாக நடக்க முடியாத நிலை ஏற்படும். குழந்தையின், 2 முதல் 3 வயதிற்குள், சரியான பரிசோதனை செய்து, இறுகிய தசைநாரை சிறிய அறுவை சிகிச்சை செய்து தளர்வாக்குவதன் மூலம், குழந்தையை நன்றாக நடக்கச் செய்ய முடியும். இதையே, 'செரிபரல் பால்சி' என்கிறோம்.

பெ. முகுந்தன், பொது மருத்துவர். சென்னை.

ண எனக்கு முதுகுவலி அதிகமாக இருக்கிறது. நண்பர்கள் மெத்தையில் படுக்க வேண்டாம் என்றும், கட்டாந்தரையில் படுத்துக் கொள் என்றும் சொல்கின்றனர். அவ்வாறு செய்தால் தீர்வு கிடைக்குமா?

ஆ. சுதர்சன், சென்னை.

முதுகுவலி அதிகமாக இருந்தால், மெத்தையில் படுப்பதற்கு பதிலாக தரையில் படுங்கள். முதுகு மற்றும் கழுத்து வலியுள்ளோர், தரையில் தலையணை இல்லாமல் நேராக படுத்தால், நிவாரணம் கிடைக்கும். அதுமட்டுமின்றி, தோள்பட்டை வலி இருந்தாலும் குணமாகும். கட்டாந்தரையில் நேராக படுத்து உறங்குவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளில் ஒன்று, உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் உடலுறுப்புகளுக்கு சீரான ரத்த ஓட்டம் கிடைத்து, இடையூறின்றி உறுப்புகள் இயங்கும்.

தி. மாதவன், இயன்முறை மருத்துவர், சென்னை.

எனக்கு வயது 28. வாய் எப்போதும் துர்நாற்றம் வீசுவதாக நண்பர்கள் கூறுகின்றனர்; காரணம் என்ன?

சி. ஜீவிதா, திருச்செந்தூர்.

வாய் துர்நாற்றம் வீசுவதற்கு, ஒவ்வொரு முறையும் உணவு உண்ட பின், வாயை நீரால் கொப்பளிக்காதது முக்கிய காரணம். மேலும், உணவு உண்ட பின், தண்ணீர் குடிக்காமல் இருப்பதும் காரணம். ஆகவே, சாப்பிட்ட பின், வாயை கொப்பளிக்கவோ அல்லது தண்ணீர் குடிக்கும் பழக்கத்தையோ ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கெட்ட பழக்கங்களான, புகை பிடிப்பது, மது அருந்துவது மற்றும் புகையிலை மெல்லுவது போன்றவை, வாயின் ஆரோக்கியத்தை கெடுப்பவை. நீரிழிவு நோய், இரைப்பை நோய், உணவு எதிர்வினை நோய், கல்லீரல் அல்லது சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டால், வாய் துர்நாற்றம் அதிகம் இருக்கும். நோய்வாய்ப்படும்போது, உடலில் அதிகமாக சேரும், 'டாக்ஸின்'கள் தான் காரணம்.

கெ. தங்கவேல், ஈரல் மற்றும் குடல் நோய் நிபுணர், சென்னை.






      Dinamalar
      Follow us