sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

கேள்வி - பதில்

/

கேள்வி - பதில்

கேள்வி - பதில்

கேள்வி - பதில்


PUBLISHED ON : நவ 19, 2015

Google News

PUBLISHED ON : நவ 19, 2015


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்களை ஆண்கள் கேலி கிண்டல் செய்ய முக்கிய காரணம் என்ன?

லோ.லதா, திருச்சி.

பெண்கள் பலவீனமானவர்கள் என்ற எண்ணம் தான். ஆண்கள் கேலி செய்யும்போது, பெண்கள் தைரியமாக எதிர்ப்பு காட்டினால், அது ஆண்களின் ஈகோவை தூண்டுகிறது. இது அதிகமாகும்போது, பெண்களுக்கு ஆபத்தாக மாற வாய்ப்புகள் உள்ளன. பெண்கள் தனியாக இருக்கும்போது, ஆண்கள் கிண்டல் செய்தால், அந்த இடத்திலிருந்து கிளம்புவது தான் நல்லது. இதை, பெண்களின் உரிமை, தைரியம், பலம் இவற்றோடு சம்பந்தப்படுத்துவதை விட, சமயோசிதமாக நடந்து கொள்வதே நல்லது.

த.சத்யா, மனநல மருத்துவர், சென்னை.

மழைக்காலத்தில் கொசுவின் தாக்கம் அதிகமாக உள்ளது. கொசுவை விரட்ட இயற்கையான வழிமுறை உள்ளதா?

எம்.மணிமேகலை, திருநின்றவூர்.

ஒரு கைப்பிடி அளவு நொச்சி இலையை லேசாக காய வைத்து புகை போட்டால், வீட்டு பக்கம் கொசு வரவே வராது. மஞ்சள், வேப்பிலை, வெங்காயத்தோல் பூண்டுத்தோல் இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்துக் கூட புகை போடலாம். ஆனால், உங்கள் வீட்டில் ஆஸ்துமா, வீசிங் பிரச்னை யாருக்காவது இருந்தால், இந்த முறையை தவிர்ப்பது நல்லது. கறிவேப்பிலை, புதினா இலைகளை கசக்கி, வீட்டின் மூலைகளில் வைக்கலாம். ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, அதன் மேல், கிராம்புகளை சொருகி வைத்தால், கொசு வராது.

வெ.தெய்வநாயகம், இயற்கை வைத்தியர்

மழைக் காலத்தில் பொதுவாக, காய்ச்சல், சளி, இருமல் போன்றவை எல்லா வயதினரையும் தாக்கும். இதற்கு, சித்த மருத்துவத்தில் தீர்வு இருக்கிறதா?

கே.சகுந்தலா, சென்னை.

கற்பூரவல்லி இலையை தண்ணீரில் நன்றாக கொதிக்கவிட்டு, வடிகட்டி கஷாயமாக தரலாம். உணவில் மிளகாய் தூளுக்கு பதிலாக, மிளகுத்தூள் சேர்க்கலாம். மிளகில் இயல்பாகவே இருக்கும், 'பி-காம்ப்ளக்ஸ்' கபத்தை வெளியேற்றும்; பசியை அதிகரிக்கும்.

ஒரு சிட்டிகை மிளகுத்தூளை, அரை டீஸ்பூன் தேனில் கலந்து குடித்து வந்தால், எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தலைவலி, சளி போன்றவற்றுக்கு, மஞ்சள் தூளையும், ஓமத்தூளையும் நீரில் குழைத்து பற்று போட்டால், நோய்கள் பறந்து போகும்.

தெ.ரங்கபாஷ்யம், சித்த மருத்துவர், மதுரை






      Dinamalar
      Follow us