வரும் போகும் மழை, பனி உடற்பயிற்சி நிற்கக்கூடாது இனி
வரும் போகும் மழை, பனி உடற்பயிற்சி நிற்கக்கூடாது இனி
PUBLISHED ON : ஆக 03, 2025

''கடும் பனி, மழைக்காலத்தில் வாக்கிங் செல்ல முடியவில்லை என்பதற்காக, முடங்கி விடக்கூடாது; வீட்டிலேயே, ரிலாக்ஸாக அனைவரும் செய்யக்கூடிய யோகாசன முறைகள் உள்ளன. தினசரி சில நிமிடங்கள் செய்து பாருங்கள். மழை வந்தாலும், பனி பெய்தாலும் உங்கள் ஆரோக்கியம் மந்தமாகாது,'' என்கிறார் யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிபுணர் ஸ்ரீகுமார்.
நாற்காலி யோகா முதியோர், அடிக்கடி நரம்பு வலியால் பாதிக்கப்படுபவர்களுக்காக, மாற்றியமைக்கப்பட்ட யோகா வடிவம்தான் நாற்காலி யோகா. உட்கார்ந்த நிலையிலோ, நாற்காலியின் ஆதரவிலோ செய்கிற யோகாசனங்கள், மூட்டுகள் மற்றும் திசுக்களுக்கு உயிர்ப்பூட்டி, வறட்சியைக் குறைத்து, நெகிழ்வை மேம்படுத்துகிறது. ரத்த ஓட்டத்தையும் சீர்படுத்தும்.
சேது பாதாசனம் முதுகெலும்புக்கு வலு தரும் 'சேது பாதாசனம்' ஒரு சிறந்த ஆசனம். மழை, பனி காலங்களில் ஆஸ்துமா, மூச்சிரைப்பு பிரச்னை உள்ளவர்களால் வெளியே செல்ல முடியாது. அவர்கள் இதை தினமும் வீட்டில் இருந்தபடி செய்யலாம். முதுகெலும்பு வலுவடைய சிறந்த பயிற்சி இது. நுரையீரலுக்கும் நல்லது.
மக்ராசனம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, செய்யக்கூடிய ஒரு எளிய ஆசனம்தான் மக்ராசனம். மனதுக்கு ஓய்வு, நிம்மதி தரும். ஹார்மோன்களை சமன்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கும். மனதுக்கு உற்சாகம் தரும்.குறிப்பாக, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த ஆசனத்தை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஆசனம் குறித்த சந்தேகங்களுக்கு, 99440 69212 என்ற எண்ணில் ஸ்ரீகுமாரிடம் பேசலாம்.

