sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/குளிர்கால தும்மலுக்கு தீர்வு

குளிர்கால தும்மலுக்கு தீர்வு

குளிர்கால தும்மலுக்கு தீர்வு


PUBLISHED ON : நவ 10, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 10, 2019


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

எனக்கு குளிர் காலத்தில் அடிக்கடி தும்மல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகல் உள்ளது. இதனால் நெஞ்சுச் சளியும் அதிகமாகிவிடுகிறது. என்ன செய்யலாம்?

சமையலுக்கு பயன்படுத்தும் விராலி மஞ்சள் துண்டு மூக்கடைப்புக்கு நல்ல மருந்து. இதனை சுட்டு எரித்து நெருப்பு அணைந்து நின்றபின் அதிலிருந்து எழும் புகையை இரண்டு துவாரங்களிலும் மாற்றி, மாற்றி ஏழு முறை இழுக்க மூக்கடைப்பு முப்பொழுதும் நீங்கும்.சித்த மருந்து கடைகளில் கிடைக்கும் நீர்க்கோவை மாத்திரையை வாங்கி வெந்நீரில் குழைத்து இளஞ் சூடாக நெற்றி, மூக்கின் ஓரம், கண்ணம், காதின் பின்புறம் ஆகிய இடங்களில் பற்று போட வேண்டும்.

திடீர், திடீரென எனது குழந்தைக்கு பேதி ஏற்படுகிறது. உணவு செரிப்பதில்லை. என்ன செய்யலாம்?

ஓமத்தண்ணீரை வாங்கி தேனுடன் குழைக்க வேண்டும். அரை தேக்கரண்டி அளவெடுத்து மூன்று அல்லது நான்கு வேளை கொடுக்கலாம். இது பேதியை தடுக்கும்.

மாதவிலக்கின் போது கடும் வலி ஏற்படுகிறது. கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஏதும் உண்டா?

அதிக உடல் பருமன், ரத்தச்சோகை, நீர் கட்டிகள், கருப்பை கட்டிகள், உடல் பலகீனம், ரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் மாதவிலக்கின்போது வலி ஏற்படலாம். இதனை பூப்பு வலி என்றும் பூப்பு காலத்தில் தோன்றும் கருப்பை இசிவு என்றும் சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது.

முட்டை வெள்ளைக்கரு, சோம்பு, கருப்பட்டி, நல்லெண்ணெய் ஆகியவற்றை அடுப்பில் போட்டு லேசாக கிண்டி நெல்லிக்காய் அளவு எடுத்து இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிட வயிற்று வலி குறையும். பெருஞ்சீரகம் என்ற சோம்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து கஷாயம் செய்து குடிக்க மாதவிலக்கு வலி உடனே குறையும்.

- டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்

சித்த மருத்துவர், மதுரை,

98421 67567


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us