sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

நலம் விரட்டும் நகம்

/

நலம் விரட்டும் நகம்

நலம் விரட்டும் நகம்

நலம் விரட்டும் நகம்


PUBLISHED ON : பிப் 10, 2015

Google News

PUBLISHED ON : பிப் 10, 2015


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனிதருக்கு இருக்கும் பழக்கங்களிலேயே, நகம் கடிக்கும் பழக்கம் மிகவும் மோசமான ஒன்று! காரணம், நகம் கடிக்கும் பழக்கம், பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும்!

பொதுவாக, நகம் கடிப்பவர்களின் விரல் நுனிகள், மொட்டையானது போன்ற ஒருவித அருவருப்பான தோற்றத்தில் இருக்கும். மேலும், நகம் கடித்ததால், விரல் நுனிகளில் காயங்களும் இருக்கும். இந்த பழக்கத்தால், நகம் பாதிக்கப்படுவதோடு, நகத்தை சுற்றியுள்ள சருமமும் மிகவும் பாதிக்கப்படும். எப்போதும், வாயில் கையை வைத்தவாறு இருப்பதால், அப்பகுதியில் உள்ள சருமமானது நன்கு ஊறி, அங்கு தோல் உரிய ஆரம்பிக்கும். இதனால், அவ்விடத்தில் ரத்தக்கசிவு மற்றும் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பும் உண்டு!

இது ஒருபுறம் இருக்க, நகம் கடிக்கும் பழக்கம் இருப்பவர்கள், அந்த நகங்களை பல சமயங்களில் விழுங்கி விடுகின்றனர். இப்படி விழுங்கப்படும் நகங்கள், செரிக்கப்படாமல், வயிற்றில் அப்படியே தங்கி, செரிமான மண்டலத்தில் பெரும் பிரச்னையை உண்டாக்கும். மேலும், கண்ட கண்ட இடங்களில் கைகளை வைத்து விட்டு, ஏதேனும் யோசனையில் இருக்கும்போதோ, அல்லது பதற்றமாக இருக்கும் போதோ, அப்படியே

விரலை வாயில் வைத்து நகம் கடிப்பது, பல்வேறு கிருமிகள் வயிற்றுக்குள் செல்வதற்கு வழிவகுக்கும்.

மேலும், பற்களால் நகங்களை கடிக்கும் போது, பற்களின், 'எனாமல்' பாதிக்கப்பட்டு, பற்கள் வலிமை இழக்கும். குழந்தைகளை பொறுத்தவரை, இளம்வயதில் இப்பழக்கம் இருந்தால், முன் பற்கள் தாறுமாறாக முளைக்கவும், தெற்றுப்பல்லாக மாறவும் வாய்ப்புண்டு. மொத்தத்தில், நகம் கடிக்கும் பழக்கம், உடல்நலத்திற்கு உகந்ததல்ல!

- ஜோ.இசபெல்லா,

சரும நல நிபுணர்.






      Dinamalar
      Follow us