sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/முளைகட்டிய பயிறு சொல்லும் சங்கதி

முளைகட்டிய பயிறு சொல்லும் சங்கதி

முளைகட்டிய பயிறு சொல்லும் சங்கதி


PUBLISHED ON : ஜூலை 16, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 16, 2017


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாம் சாப்பிடும் உணவில், வேக வைத்த தானியங்களும், காய்கறிகளுமே முக்கிய உணவாக உள்ளன. அவ்வப்போது, பச்சை காய்கள், முளைகட்டிய தானியங்களையும் உட்கொள்ள வேண்டும். முளைவிட்ட தானியங்கள், மனிதனுக்கு கிடைத்த ஒரு வரம் என்று சொல்லலாம்.

முளைவிட்ட தானியங்கள், ஒரு முழுமையான உணவாக இருந்தாலும், இன்னும் பலர் அதை தினசரி உணவாக பயன்படுத்த தயங்குகின்றனர். உடலுக்கு வலிமை சேர்ப்பதற்காக, உடற்பயிற்சி கூடத்துக்கு செல்லும் இளைஞர்கள் பலர், முளைகட்டிய பயிறுகளை தான், முக்கிய உணவாக எடுத்துக் கொள்கின்றனர்.

செரிமான சக்தி அதிகரிக்கும்: மனிதன் உட்கொள்ளும் எண்ணற்ற உணவுகளில், ஒரு பிடி முளைவிட்ட தானியத்தில் கிடைக்கும் சத்து, வேறு எந்த உணவின் ஒரு பிடியிலும் இருக்காது. ஒரு தானியத்தில் உள்ள வைட்டமின் சக்தி, முளை விடும் போது பன்மடங்காகிறது. முளைவிட்ட கோதுமையில், வைட்டமின் 'சி', 600 சதவீதம் அதிகமாகிறது. ஆரஞ்சுப் பழத்தில் உள்ள வைட்டமின் 'சி' அளவை விட, இது அதிகம்.

இப்பயிறு வகைகளை சாப்பிடுவது மூலம், உடலுக்கு தேவையான சக்திகள் மற்றும் உடலுறுப்புகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

இந்த தானியங்கள், நேரடியாக உடலுக்கு செரிமான சக்தியை அதிகரிக்கும்.

அளவில்லா ஊட்டச்சத்துகள்: வாழ்நாளை நீட்டிக்கக்கூடிய தன்மை கொண்ட என்சைம்ஸ், முளைவிட்ட தானியத்தில் அதிகமாக உள்ளது. உடல் சோர்ந்து போகும் போது, முளைவிட்ட பயிரை சாப்பிட்டால், புத்துணர்ச்சி பிறக்கும். முளைக்கட்டிய தானியத்தில் பாசிப்பயிறு, சோளம், கொள்ளு உட்பட தானியங்களை எடுத்துக் கொள்ளலாம்.

பாசிப்பயிறை, சாப்பிடக்கூடிய அளவில் எடுத்து, காலையில் தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும். இரவு கைக்குட்டை அளவுள்ள துணியில் சுற்றி, முடிச்சுப் போட்டு வைக்க வேண்டும். மறுநாள் பார்த்தால், முளைவிட்டு வளர துவங்கியிருக்கும்.

காலையில் வெறும் வயிற்றில், இதை உட்கொள்வது மிகச்சிறந்தது. இதை சாப்பிட்ட பின், அரை மணிநேரம் கழித்து தான், தேநீர் அல்லது மற்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும். தினமும் இதை சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவாகும். எலும்புகள் வளர்ச்சியுறும். குழந்தைகளின் அறிவு வளர்ச்சி

அதிகரிக்கும். ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கும்.

தேகம் பலப்படும்: உணவின் மூலம், புரதம், கால்சியம், சோடியம், இரும்பு தாது, பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவை கூடுதலாக கிடைப்பதுடன், வைட்டமின் 'ஏ', 'பி1' மற்றும் 'பி2' போன்றவை அதிகளவில் கிடைக்கிறது. முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். முளை விட்ட கோதுமை சாப்பிட்டால், புற்று நோய் தாக்கத்தை குறைக்கும். முளை விட்ட எள்ளு சாப்பிட்டால், ஒல்லியாக இருப்பவர்களுக்கு பருமன் கூடும். கண்பார்வை பலப்படும்.

முளைவிட்ட கொண்டக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடின வேலை செய்பவர்கள் அதிகம் உட்கொள்ளலாம். இதனால், சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ளலாம். முளை விட்ட கருப்பு உளுந்து, தாய்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும். முளை விட்ட கொள்ளு சாப்பிட்டால், உடல் பருமன் குறைந்து மூட்டு வலி நீங்கும். தானியங்கள் வருடம் முழுவதும் விளைகின்றன. அவற்றை முளைவிடச் செய்து, வருடம் முழுவதும் சாப்பிடலாம். இவற்றில் எந்த ரசாயனமும் இல்லை. சமைக்கக் கூடத் தேவையில்லை.

மிகக் குறைந்த கலோரி அளவு உள்ள உணவும் கூட.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us