தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/தொற்றை தடுக்கும் சுலப வழி சுய சுகாதாரம்!

தொற்றை தடுக்கும் சுலப வழி சுய சுகாதாரம்!

தொற்றை தடுக்கும் சுலப வழி சுய சுகாதாரம்!


PUBLISHED ON : நவ 28, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 28, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மழை ஆரம்பித்ததும் கெட்டுப்போன உணவு, அசுத்தமான நீர் வாயிலாக பரவும் வயிற்றுப்போக்கு, டைபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற தொற்று நோய்கள் பரவுவது அதிகரித்து உள்ளது. இத்துடன், கொசுக்களால் பரவும் 'டெங்கு' காய்ச்சல் பாதிப்பும் உள்ளது.

கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக அனைவரும் வீட்டிலேயே இருந்தோம்.அதனால் தொற்று நோய்களின் தாக்கம், இந்த பருவத்தில் குறைவாக இருந்தது. இப்போது அனைவரும் வெளியில் வந்து விட்டதால், அதிகம் பேர் பாதிக்கப்படுகிறோம்.

டைபாய்டு, பேரா டைபாய்டு என, இரு வகை காய்ச்சல் உள்ளது. இது பாக்டீரியா தொற்றால் வருகிறது. இதில்டைபாய்டு காய்ச்சலுக்கு மட்டும் தடுப்பூசி உள்ளது. ஒருமுறை போட்டால், ஐந்து ஆண்டுகளுக்கு பாதுகாப்பு தரும்; 1 வயது முதல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் குறையாமல் இருந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். சுயமாக மாத்திரை, மருந்து சாப்பிடுவதை தவிர்ப்பது அவசியம்.

வெளியில் சாப்பிடுவதால், டைபாய்டு போன்ற நோய்கள் வருவதாக நினைக்கிறோம். வீட்டிலும் கூட காய்கறிகளை சரியாக சுத்தம் செய்யாமல் சமைப்பது, பழங்களை நன்கு கழுவி, துடைத்து சாப்பிடுவது இல்லை.

வெளியில் சென்று வந்தால் கால்களை கழுவிய பின் வீட்டிற்குள் வருவது, சாப்பிடும் முன், பாத்ரூம் சென்று வந்த பின், கைகளை சுத்தமாக கழுவ வேண்டியதன் அவசியத்தை நம் முன்னோர்கள் பல காலமாக சொல்லி வந்தனர்.

ஆனால் அவற்றை செய்ய வேண்டிய அவசியத்தை கொரோனா வந்த பின் தான் முழுமையாக புரிந்து கொண்டோம். சுய சுகாதாரம் இருந்தால் எந்த தொற்றும் வராது. இந்த பருவத்தில், வெளியில் இருந்து வாங்கி வரும் சமைக்காத சாலட், நறுக்கிய பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

நம் நாட்டை போல வெப்ப மண்டல நாடுகளில் கொசுவுடன் தான் வாழ வேண்டும். மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கினால் யாரையும் குறை சொல்லாமல், குறைந்தபட்சம் நம் சுற்றுப்புறத்தை நாமே சுத்தமாக வைத்திருந்தால் நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

டெங்குவில் நான்கு வகைகள் இருந்தாலும், எந்த வகை பாதிப்பு என, பரிசோதனையில் தெரியாது. ஏற்கனவே பாதித்தவர் மீண்டும் பாதிக்காமல் இருக்க மட்டும் தடுப்பூசியை பயன்படுத்த, உலக சுகாதார மையம் சிபாரிசு செய்கிறது. எந்த தொற்றாக இருந்தாலும் உடல் வலி, காய்ச்சல் இரண்டும் தான் துவக்க நிலை அறிகுறியாக இருக்கும்.

டாக்டர் மதுமிதா,

தொற்று நோய்கள் மருத்துவ ஆலோசகர்,

எம்.ஜி.எம்., மருத்துவமனை, சென்னை.

98406 27495


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us